பொது செய்தி

இந்தியா

ரூ.2,000 அபராதம் செலுத்தி மன்னிப்பு கேட்ட நடிகை

Added : பிப் 05, 2020
Advertisement

பெங்களூரு: கார் ஓட்டிக்கொண்டே, 'செல்பி வீடியோ' எடுத்து விவாதத்துக்கு ஆளான நடிகை சஞ்சனா கல்ரானி, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி, போலீசாரிடம் மன்னிப்பு கோரினார்.

பெங்களூரு இந்திரா நகரில், சமீபத்தில் சொகுசு காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த, நடிகை சஞ்சனா கல்ரானி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில், 'செல்பி' எடுத்தார்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்கு, போலீசார், 'நோட்டீஸ்' அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர்.
சஞ்சனா படப்பிடிப்புக்காக, துபாய் சென்றிருந்ததால் கால அவகாசம் கோரியிருந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவர், நேற்று முன் தினம், போக்குவரத்து போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடாவை சந்தித்தார்.


'பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு, நான் செய்திருக்கக்கூடாது' எனக்கூறி மன்னிப்பு கோரினார். செய்த தவறுக்கு 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X