தமிழ்நாடு

சிசுவுக்கு அரியவகை புற்றுநோய் கட்டி : சேலம் அரசு டாக்டர்கள் அகற்றி அசத்தல்

Added : பிப் 05, 2020
Advertisement

சேலம்:பெண் சிசுவுக்கு, அரியவகை புற்றுநோய் மூளைக்கட்டியை, ஐந்து மணி நேர, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, சேலம் அரசு மருத்துவமனை குழுவினர் சாதனை நிகழ்த்தினர்.

ஈரோடு மாவட்டம், குறிச்சியைச் சேர்ந்த, கட்டடத் தொழிலாளி பெரியண்ணன், 31; மனைவி சரளா, 23. இவருக்கு, ஜன., 5ல், முதல் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை, உணர்ச்சியற்று காணப்பட்டது.மேல் சிகிச்சைக்கு, 11ல், சேலம், அரசு மருத்துவமனை, பச்சிளங்குழந்தைகள் வார்டில், தாய், சேய் அனுமதிக்கப்பட்டனர். சோதனையில், பெண் சிசுவுக்கு, அரியவகை மூளைக்கட்டி புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.தொடர் சிகிச்சைக்கு பின், 22ல், அறுவை சிகிச்சை நடந்தது. நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சங்கர் தலைமையில் குழுவினர், குழந்தையின் மூளைப் பகுதியிலிருந்து, புற்றுநோய் கட்டியை, அறவே, வெற்றிகரமாக அகற்றினர். பின், பச்சிளம் பிரிவின், தீவிர கண்காணிப்பில் வைத்து, பராமரிக்கப்பட்ட பெண் சிசு, தற்போது, உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.

டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளில், 10 சதவீத குழந்தைக்கு மட்டும், இந்தவகை புற்றுநோய் கட்டி வரும். அதுவும், மூளையின் தலாமஸ் பகுதியில் வரும் இந்த கட்டி, 0.5 சதவீதம் மட்டுமே கட்டி வரும். இங்கு, இந்த வகை புற்றுநோய் கட்டிக்கு சிகிச்சை அளித்தது, இதுவே முதல்முறை. நரம்பு மண்டல பாதிப்பு, உயிர் பாதிப்பில் இருந்து, குழந்தை காப்பாற்றப்பட்டு, தற்போது முழு ஆரோக்கியத்துடன், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முதல் ஆறு மாதத்துக்கு, மாதம் ஒருமுறை சிகிச்சை, பின், ஆறு மாதத்துக்கு ஒருமுறை, இடையே ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவசர சிகிச்சை என, தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்கு, தனியார் மருத்துவமனையில், 3 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, செலவாகியிருக்கும். காப்பீடு திட்டம் மூலம், இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X