சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துறையூர் ஒழுங்குமுறை விற்பனைகூட பருத்தி ஏலம்: 2 மணி நேரம் பாதிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

துறையூர் : துறையூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டையைக் காணவில்லை என்று ஒருவர் கூறியதால், பருத்தி ஏலம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

திருச்சி, துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டிச., 26ம் தேதி முதல் கடந்த, 5 வாரங்களாக பருத்தி விற்பனை நடைபெறுகிறது. துறையூர் பகுதியில் விளையும் பருத்தி தரமாக இருப்பதால், திருச்சி உள்பட, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பருத்தி வியாபாரிகள், துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று, பருத்திகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைக் காட்டிலும், துறையூரில் தான் பருத்தி ஏலம் அதிக தொகைக்கு கொள்முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, முதல் வாரத்தில், 60 மூட்டைகளை கொண்டு நடைபெற்ற பருத்தி ஏல விற்பனை, அடுத்தடுத்த வாரங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் செய்து விற்பனை நடந்தது.

இந்நிலையில், 6வது வாரமாக நேற்று (4ம் தேதி) பருத்தி ஏலம் நடந்தது. துறையூர் அருகே வாலீஸ்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரும், வக்கீல் அண்ணாதுரை என்பவரும், தலா, 10 மூட்டைபருத்தியை, விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவுகொண்டு போய் வைத்துள்ளனர். நேற்று காலை அண்ணாதுரை சென்று பார்த்தபோது, ஒரு மூட்டையை காணவில்லை என, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அதிகாரிகளுக்கும், வக்கீல் அண்ணாதுரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், 2 மணி நேரம் பருத்தி ஏலம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த பருத்தி விவசாயிகள் அதிகாரிகளையும், வக்கீலையும், அவரது நண்பர் கருணாநிதியையும் சமாதானம் செய்தனர். பின்னரே ஏலம் நடந்தது. இப்பிரச்னையால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விவசாயிகள், விற்பனைக்கூட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X