பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் - பழநி ரோடு ஒருவழிப் பாதையாக மாற்றம்

Added : பிப் 05, 2020
Advertisement

திண்டுக்கல்: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி - ஒட்டன்சத்திரம் ரோடு நாளை (பிப்.,6) முதல் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா பிப்.,2 முதல் 11 வரை நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒட்டன்சத்திரத்தில் ஒன்று சேர்ந்து பாத யாத்திரையை தொடர்வர். இதனால் பழநி - ஒட்டன்சத்திரம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து நாளை (பிப்.,6) முதல் பிப்.8 ம் தேதி வரை ஒட்டன்சத்திரம் - பழநி ரோடு ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

இப்பகுதிகளில் இருந்து பழநி செல்லும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், தொப்பம்பட்டி வழியாக பழநி செல்ல வேண்டும். அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள், டவுன் பஸ்கள் மட்டுமே ஒட்டன்சத்திரம் - பழநி ரோட்டில் அனுமதிக்கப்படும். கோவையில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் தாளையூத்திலிருந்து கொழுமம் கொண்டான், கீரனுார், தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம் வழியாகவும், தாராபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் தொப்பம் பட்டியில் இருந்தும் திருப்பி விடப்படும். இம்மாற்றம் பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து நீட்டிக்க வாய்ப்பு உள்ளது, என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X