பொது செய்தி

தமிழ்நாடு

ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஆறாம் கால யாகசாலை பூஜை

Added : பிப் 05, 2020
Share
Advertisement

திருவாரூர்: ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 6ம் கால யாகசாலை பூஜைகள் நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்தின் அருகே திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை 6ம் கால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் வித்யா பீடம் வித்யா அபினவ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்தாபகர் ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலி மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்நது மாலை 7ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் ராமகிருஷ்ணன் ஸ்தபதி குழுவினரால் சுவாமிகளுக்கு கண் திறக்கும் நிகழ்வும், அதனையடுத்து அஷ்டபந்தனம், விக்ரக சுத்தி மற்றும் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X