பொது செய்தி

இந்தியா

'ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு': மோடி

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (27)
Advertisement
PM,Modi,DefExpo,DefExpo2020,MakeinIndia,பிரதமர்,மோடி

இந்த செய்தியை கேட்க

லக்னோ:ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், தலைநகர் லக்னோவில், 11வது ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்தியா போன்ற பெரிய நாடுகள், ராணுவ தளவாடங்களுக்கு, இறுக்குமதியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதனால் தான், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுத்தோம்.மத்தியில், 2014ல், நாங்கள் ஆட்சியில் அமர்ந்த போது, ராணுவ தளவாடங்கள் தயாரிக்க, 210 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இது, 460 ஆக உயர்ந்துள்ளன.இந்தியா இப்போது, பல ராணுவ தளவாடங்களை தயாரித்து வருகிறது. பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், விமானம் தாங்கி கப்பல்கள், நீர் முழ்கி கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.

'இந்தியாவுக்காக, உலகுக்காக, இந்தியாவிலேயே தயாரிப்போம்' என்பது தான், நம் தாரக மந்திரம். கடந்த, 2014ல், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, 2,000 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், இது, 17 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ராணுவ தளவாடங்கள், கருவிகள் வாங்குவதற்கு, சர்வதேச அளவில் பெரிய சந்தையாக இந்தியா திகழும். அதிலும், இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமாக உத்தர பிரதேசம் இருக்கும். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் ஆகியவை தான், இன்று உலகுக்கு பெரும் சவால்களாக உள்ளன. இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, ராணுவத்துக்கு பெரும் பங்கு உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பதவி, ராணுவ விவகாரங்களுக்கு தனித்துறை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நாம் எந்த நாட்டையும் மிரட்டவோ, ஆக்கிரமிக்கவோ, ராணுவத்தை வலுப்படுத்தவில்லை. உலக அமைதி காப்பதில், இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு தளவாடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, அதிநவீன துப்பாக்கியை இயக்கி பார்த்தார்.

70 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
லக்னோவில், ராணுவ கண்காட்சி, வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், 40 நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் உட்பட, 70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த, 172 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

இந்தியாவிலிருந்து, 856 நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் தயாரிப்புகளை பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளன.கண்காட்சி பற்றி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''இந்திர ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கும் நோக்கில் தான், இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செயசயப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமாக, இந்தியா மாறி வருவதை காட்டுவது தான், கண்காட்சியின் முக்கிய நோக்கம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
06-பிப்-202007:48:33 IST Report Abuse
Vetri Vel சீனா இரும்பு சிலை.. மேக் இன் இந்தியா திட்டத்துல.. வெக்கம் கிலோ என்ன விலை இங்கே..... வாய் கூசாமல்... பேசுவதற்கு..?
Rate this:
Share this comment
Cancel
deep - Chennai,இந்தியா
06-பிப்-202006:58:23 IST Report Abuse
deep தண்டக்கோன் முரசொலி மட்டும் படிப்பான் போல. குண்டூசி கூட தயாரிக்கலையாம். 2017லயே ஆஸ்திரேலியாக்கு ரயில் பெட்டிகள் தயாரிச்சி ஏற்றுமதி செஞ்சாச்சு. நீ துரோகி.
Rate this:
Share this comment
madurai kaipulla - melbourne,ஆஸ்திரேலியா
06-பிப்-202008:17:39 IST Report Abuse
madurai kaipullaதம்பி இந்தியால பண்ண எந்த train ஆஸ்திரேலியா நகரத்தில் ஓடுதுனு சொல்லுங்க...
Rate this:
Share this comment
madurai kaipulla - melbourne,ஆஸ்திரேலியா
06-பிப்-202008:19:10 IST Report Abuse
madurai kaipullaசென்னை மெட்ரோ ALSTOM பிரெஞ்சு கம்பெனி கிட்ட வாங்குனது....
Rate this:
Share this comment
Cancel
deep - Chennai,இந்தியா
06-பிப்-202006:51:28 IST Report Abuse
deep Other side of Modi WHILE WE WERE FIXED ON CAA RIOTS. THIS TOO HAPPENED 1) US dilutes Iran oil sanction. INDIA to go ahead on Chabahar port work. Foreign Secretary Jaishankar in IRAN. 2) India-IRAN will trade in INR to save lot of our FOREX reserves 3) Biggest train bridge approved that will reduce travel time between Assam & Arunachal from 600 km to 40 km 4) In-land water transport exted to reduce logistic costs. 5) Petrol price reduced in India as Saudi /UAE decide to help India. 6) India adds stealth force to our MOUNTAIN CORPS, strategically important for mountain war fare with Chinese. 7) India jumps in electricity accessibility ranking from 99th to 26th, a huge movement of 73 positions. 14 Special Economic Zones being set up in next 6 months to boost MAKE IN INDIA and Exports to more job opportunity. 9) Hyundai to set up new plant in Chennai for local manufacture of their very efficient electric car. 10) Flexi fare in some trains to be removed starting April 2020. 11) GST collection rose from ₹ 85K crs per month to ₹95K crs and last month it crossed ₹100K crs , 95% of input credit is cleared within next month and compensation to state for short fall has reduced in last three months....no state is now against GST since it has released lot of admin pressure from state govt.... 12) ing of Sikkim airport is considered one of the best in the recent times by international aviation teams. 13) Statue of Unity became biggest attraction for Indian & Global Tourists In the first week of December it earned revenues of ₹2.1 crs in ticket collection alone 14) Mumbai local train network will be completely revamped in next 5 to 6 yrs.... 15) Foreign enemy property is going to be auctioned soon. Govt expected to revenues in excess of ₹ 1 lakh Crores 16) Indian Army destroyed several terror camps, BAT HQ, damaged Brigade HQ of Pakistan Army resulting in dozens of Pakistani casualties. 17) India tested successfully nextgen Pinaka Missiles with range of 90 km 18) India tested modified Akash supersonic Missiles fitted with indigenous RamJet engines placing us in the top three Nations 19) Modi has supercharged MAKE IN INDIA program by placing orders for 83 more TEJAS MK1A Aircrafts and promised additional order of 200 Aircrafts if HAL/ADA develop AMCA with 6th Gen features powered by indigenous 120 KN jet engines by 2024 20) India's entry into UNSC is closer than ever with all 4 permanent members and 10 out of 12 non permanent members supporting us This support is the highest so far 21) Finally, Pakistan judiciary and Army is at loggerhead and some massive political change is soon expected Our media does not tell you these but will speak only about crime, dirty politics and not about above achiements of the Govt. Intelligent patriotic citizens will be proud to read and circulate this information
Rate this:
Share this comment
iresentdinamalam - nammaoor,மயோட்
06-பிப்-202014:00:28 IST Report Abuse
iresentdinamalamSo BJP gained those brownie points? Most of them are sheer HUMBUG....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X