ஆபாச படங்கள் குறித்த நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி : குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பாகவும் அதனை தடுப்பதற்கு அரசு என்ன வழிமுறைகளை செய்துள்ளது, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு லோக்சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.






ஆபாச படங்கள் குறித்த நடவடிக்கை குறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'ஆபாச படங்கள் என்பது கடுமையான அச்சுறுத்தல். குழந்தை ஆபாச படங்களை பொறுத்தவரை அது மிகக் கடுமையாக கையாளப்பட வேண்டும். குழந்தைகள் தொடர்பான ஆபாச நிகழ்வுகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போலி செய்திகள் மற்றும் ஆபாசங்களை சமூக ஊடக தளங்களில் பரப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பழிவாங்கும் ஆபாசமும் அதிகரித்து வருகிறது.





சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள், ஆபாச மற்றும் தேச விரோத உள்ளடக்கங்கள் பரவுவது குறித்து அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சைபர் குற்றத் தடுப்பு மற்றும் எம்.எச்.ஏ.,வின் கட்டுப்பாடு போன்ற ஆலோசனைகள் உட்பட பல ஆலோசனைகள் இதில் அடங்கும். ஆனால் அதே சமயம் அடல்ட் ஆபாச படங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் வீட்டில் அமர்ந்து பார்ப்பது தன்னுடைய உரிமை என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது. விபிஎன் சேவை மூலம் பல நல்ல செயல்களும் நடைபெறுகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-பிப்-202016:59:10 IST Report Abuse
bal ஏன் இந்த airtel vodafone jio போன்ற நிறுவனங்கள் தங்கள் broad பேண்ட் சேவையில் தடுக்கலாம்....இது போன்ற website கனெக்ஷன்களை
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202009:26:47 IST Report Abuse
Babu யாராச்சும் முக்கிய புள்ளியோட வீடியோ எதுனாச்சும் லீக்காயிருச்சா? மக்கள் நல்லாயிருக்கணும்னு இவ்வளவு மெனக்கெடற மாதிரி நம்ம அரசியல் சிஸ்டம் கிடையாதே?
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-202020:38:26 IST Report Abuse
ஆப்பு தனியா ரூமில் உக்காந்து பாத்தாலும் சிறுவர், சிறுமியர் ஆபாச படமா இருந்தா அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
05-பிப்-202022:29:30 IST Report Abuse
Nallavan Nallavanவீட்டில் அமர்ந்து குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்தால் கூட அது குற்றமே .... அதே சமயம் வயதுவந்தோருக்கான ஆபாசப்படத்தை வீட்டில் பார்ப்பது பிறரைப் பாதிக்காது என்பதால் சட்டம் ஆட்சேபிப்பதில்ல்லை .... அவர் சொல்ல வந்தது இதைத்தான் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X