சிஏஏ.,வால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது : கெஜ்ரிவால்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement

புதுடில்லி : 21 ம் நூற்றாண்டிற்கான புதிய இந்தியாவை சிஏஏ மற்றும் என்ஆர்சி.,யால் உருவாக்க முடியாது. ஆனால் நல்ல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளால் உருவாக்க முடியும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.latest tamil newsடில்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த ஷாஹீன் பாக் பகுதியின் கதவுகள் டில்லி தேர்தல் ஆதாயத்திற்காக அமித்ஷா தற்போது திறந்து விட்டுள்ளார். அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் அதிகாரமிக்கவர். அதனால் அவரால் சாலையை திறக்க முடியாது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். பல முயற்சிகளில் அவர்கள் அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்ததை பா.ஜ.,வால் விளக்கிக் கூற முடியாது.


latest tamil news


ஷாஹீன் பாக், ஜாமியா, நேரு பல்கலை.,யில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு அமித்ஷாவே பொறுப்பு. கட்சி அரசியலை பல்கலை., வளாகங்களுக்குள் கொண்டு வர வேண்டாம். இத்தகைய அரசியலால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். சிஏஏ மற்றும் என்ஆர்சி.,ஆல் 21 ம் நூற்றாண்டிற்கான புதிய இந்தியாவை உருவாக்க முடியாது. நல்ல தரமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாலேயே புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-202020:54:23 IST Report Abuse
Tamilan CAA புதிய இந்தியாவை உருவாக்கத்தான் இயற்றப்பட்டதாக இவருக்கு யார் கூறினார்கள் . எதிர்க்கவேண்டும் என்பதற்காக , மற்ற மதவாதிகளை தாஜா பண்ணவேண்டும் என்பதற்காக , இவர் எதையோ உளறுகிறார் .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-பிப்-202019:21:43 IST Report Abuse
Malick Raja CAA.NRC.NPIR. மூன்றுக்கும் என்னென்ன ஆவணங்கள் வேணும் இதெல்லாம் செல்லுபடியாகும் .. என்று சொல்லாமலிருப்பது மனிதமாண்புக்கு அப்பாற்பட்டது . போகட்டும் முதல் குடிமகன் .பிரதமர் ,தலைமைநீதிபதி ,துணை ஜனாதிபதி ,சபாநாயகர் ,மத்திய அமைச்சர்கள் ..முதலில் தங்களின் ஆவணங்களை காண்பித்து பதிவு செய்து இந்தியாவின் குடியுரிமை பெற்றுவிட்டோம் எனபதை தெளிவாக்கினால் போதுமே .. ஒருவரும் போராட்டம் செய்யமாட்டார்கள் . இது செய்யாமல் சும்மா சென்று அதை கொடு இதை கொடு என்றால் அணைத்து இந்தியர்களும் ஜாதி மதமற்று துடைப்பத்தை எடுத்து துவைத்து விடுவார்கள் .. காவல்துறையோ இராணுவமோ பொதுமக்களை ஒன்றும் செய்யாது மாறாக வந்தவர்களை கேள்விகேட்பார்கள் அப்போதுதான் பலரகசியங்களும் வெளிவரும் .. மங்கிகள் ,மங்குணிகள் ,மங்கி பாத் கேட்பவர்கள் அதாவது அக்கூட்டத்தில் சுமார் .2.கோடிபேர் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது . உரிய நேரத்தில் அவர்களை தடுப்பு முகாமில் கொண்டு சேர்த்தால் அவர்களின் கொட்டம் அடங்கும் .. கிருஷ்ண அய்யர் என்ற மூத்த வழக்கறிஞர் சென்னையில் பேசியது இந்த 2.கோடி பேருக்கும் தெரியும் .. அவர் சொன்னார் CAA,NRC.NPIR. அனைத்தும் தேசத்திற்கு விரோதமானது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார் ... விஷமிகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் அவர் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார் youtube..ல் காணலாம்
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-202017:23:23 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா 10 லட்சசத்துக்கு சமோசா தின்று, இலவசங்களை வாரி கொடுத்து இவர்கள் கண்டிப்பாக புதிய தின்னி இந்தியாவை உருவாக்கி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X