பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையத்தில் ஆங்கில வழிக்கல்வி துவக்கம்

Added : பிப் 06, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அங்கன்வாடி மையத்தில், இலவச ஆங்கில வழி, முன் பருவக்கல்வி துவக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் எர்ரஅள்ளி அங்கன்வாடி மையத்தில், அமீகா அறக்கட்டளை சார்பில், குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி முன் பருவக்கல்வி வழங்கப்படுகிறது. ஆர்.டி.ஓ., தெய்வநாயகி முன் பருவக்கல்வியை துவக்கி வைத்து பேசியதாவது: சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, உடல், சமூக, மன எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றை தூண்டும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாதம் ஒரு தலைப்பு வீதம் கலந்துரையாடல், கதை சொல்லுதல், திட்டமிட்ட விளையாட்டு ஆகிய செயல்பாடுகள் அங்கன்வாடி பணியாளர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, இந்த செயல்வழி கற்கும் முறையில் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X