பொது செய்தி

தமிழ்நாடு

'நடிகர் ரஜினி பா.ஜ.,வின் குரலாக மாறி இருக்கிறார்'

Added : பிப் 06, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: ''நடிகர் ரஜினி, பா.ஜ.,வின் குரலாக மாறி இருக்கிறார்,'' என, மா.கம்யூ., கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமுதாயத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. டெல்டா மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. அ.தி.மு.க., அரசில் எல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடு, பெரிய கூட்டம் நடத்தியதாக தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில், பேராசிரியர் தேர்வுக்கான முறைகேட்டில், 700 கோடி ரூபாய்க்கு வசூல் நடந்ததாக கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அமைச்சராக பேசுகிறார். நடிகர் ரஜினி கிட்டத்தட்ட, பா.ஜ.,வின் குரலாக மாறி இருக்கிறார் என்பதை அவரது பேச்சு காட்டுகிறது. இஸ்ஸாமியர்கள் பாதிக்கப்பட்டால், முதல் நபராக போராடுவேன் என்ற ரஜினி, அவர்கள் பாதிக்கப்பட்ட போது, அவர் குரல் கொடுத்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X