சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை மிதித்து பெண் பலி

Added : பிப் 06, 2020
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஒற்றை யானை மிதித்ததில் பெண் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மரகட்டா கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 40. கணவரை இழந்தவர். இவருக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை, அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சரஸ்வதி சாமி கும்பிடச் சென்றார். அப்போது மரகட்டா அருகே வனப்பகுதியில், 15 யானைகள் கொண்ட கூட்டம் இருந்தது. அதிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, சரஸ்வதியை தும்பிக்கையால் தூக்கி, காலில் போட்டு மிதித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை தேன்கனிக்கோட்டை போலீசார் மீட்டனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சீதாராமன், வனவர் கதிரவன், வனக்காப்பாளர் பவித்ரா, வனக்காவலர் நாராயணன் ஆகியோர், சரஸ்வ தியின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X