சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி விபத்து: மாஜி ராணுவ வீரர் உயிரிழப்பு

Added : பிப் 06, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, அரசு பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியானார். கிருஷ்ணகிரி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குலாப்ஜான், 77. முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று முன்தினம் மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ள கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் தின்னகழனி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து, ராயக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X