சேற்று நீரை குடித்ததால் பரிதாபம்: 9 மாத பெண் யானை குட்டி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேற்று நீரை குடித்ததால் பரிதாபம்: 9 மாத பெண் யானை குட்டி சாவு

Added : பிப் 06, 2020
Share

ஓசூர்: வனத்தில் சேற்று நீரை குடித்ததால், ஒன்பது மாத பெண் யானை குட்டி இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு காப்புக்காட்டில், 30க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இங்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, ஒன்பது மாத யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, ஓசூர் வனச்சரக அலுவலர் சீதாராமன் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானை குட்டியை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் யானை குட்டி, சேற்று நீரை குடித்து இறந்ததாத தெரிவித்தனர். யானை குட்டியின் உடல் அந்த இடத்திலேயே தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே கடந்த ஜன.,12ல், யானை குட்டி ஒன்று தாயிடமிருந்து பிரிந்து அகரம் கிராமத்துக்குள் வந்தது. வனத்துறையினர் அதை சானமாவு வனப்பகுதியில் விட்டனர். மீண்டும் அந்த யானை குட்டி கடந்த ஜன., 27ல், சானமாவு கிராமத்துக்குள் வந்தது. மீண்டும் அதை பிடித்து வனத்தில் விட்டனர். அந்த யானை குட்டி தாயுடன் சேரவில்லை. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'' யானை குட்டியை அதன் தாயுடன் சேர்க்க முயற்சி செய்தோம். அது, யானை கூட்டத்துடன் சேர்ந்து விட்டதாகவே தெரிகிறது. தற்போது இறந்துள்ள யானை குட்டி அது இல்லை. கடந்த மாதம் வந்தது, எட்டு மாத ஆண் யானை குட்டி. தற்போது இறந்துள்ளது, ஒன்பது மாத பெண் யானை குட்டி,'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X