பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் ரூ.48,960 கோடி பயிர் கடன்': கூட்டுறவு துறை அமைச்சர் ராஜூ தகவல்

Added : பிப் 06, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: ''தமிழகத்தில், 2011 முதல் இதுவரை, 48 ஆயிரத்து, 960 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் ராஜூ பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், சந்தாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் பங்க் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 1,802 பயனாளிகளுக்கு, 13 கோடியே, 43 லட்ச ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜூ பேசியதாவது: கூட்டுறவு துறை சார்பில், தமிழகத்தில் இதுவரை, 39 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த, 2011க்கு பிறகு இதுவரை, 91 லட்சத்து, 60 ஆயிரம் பேருக்கு, 48 ஆயிரத்து, 960 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தில், இரண்டு கோடியே, 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. கூட்டுறவு துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த, 2011 முதல், 2019 வரை, தமிழகம் முழுவதுமுள்ள, 60 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, 247 கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்பட்டுள்ளது. கந்து வட்டி கொடுமையை ஒழிக்க, சிறு வணிகக்கடன், கடந்த ஆண்டு செப்., முதல், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், மனோரஞ்சிதம், கூட்டுறவு இணை பதிவாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X