வீட்டுக் குழாயில் மதுபான சப்ளை: அதிர்ச்சியில் மக்கள்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (24)
Advertisement

இந்த செய்தியை கேட்க

திரிச்சூர் : சினிமா காமெடி ஒன்றில், நான் தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டிற்கே குழாய் மூலம் மதுபானம் சப்ளை செய்வேன் என தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆண் வாக்காளர்களை கவர வாக்குறுதி அளிப்பது போன்று காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.







திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில் சாலமோன் அவென்யூ அபாட்மென்ட் உள்ளது. இதில் 18 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் இந்த குடியிருப்பில் உள்ள வீட்டு குழாய்களில் பழுப்பு நிறத்தில், மோசமாக நாற்றத்துடன் தண்ணீர் வந்துள்ளது. வீட்டு சமையல் அறைகளுக்கு வந்த தண்ணீர் குழாய்களை ஆய்வு செய்ததில் இதில் பீர், பிராந்தி, ரம் போன்றவை கலந்த மதுபானம் வருவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.





அதிகாரிகள் விசாரணை செய்ததில், சாலமோன் அவென்யூ குடியிருப்பிற்கு முக்கிய ஆதரமாக விளங்கும் கிணற்றில், கடந்த சில நாட்களுக்கு முன் பறிமுதல் செய்த சுமார் 4500 லிட்டர் மதுபானங்கள் கொட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. புழக்கத்தில் இல்லாத கிணறு என நினைத்து மதுபானங்கள் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மதுபானங்கள், குடிநீருடன் கலந்து வீடுகளுக்கு சப்ளை ஆனது தெளிவானது. இதனையடுத்து கிணற்றை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.






இது தொடர்பாக நகராட்சி கமிஷனர் கூறுகையில், சுமார் 8 முறைக்கு மேல் கிணறு சுத்தப்படுத்தப்பட்டு விட்டது. மதுபானங்கள் அனைத்தும் நீரில் இருந்து அகற்றப்பட்டு விட்டன. முழுமையாக கிணறு சுத்தம் செய்யப்படும். அதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
06-பிப்-202017:10:28 IST Report Abuse
mrsethuraman  எங்க ஏரியாவில் தண்ணி கஷ்டம் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
06-பிப்-202017:08:48 IST Report Abuse
mrsethuraman  எப்படியோ 'குடி'மக்கள் பிரச்சனை தீர்த்து விட்டார்கள்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-பிப்-202020:00:26 IST Report Abuse
தமிழ்வேல் அந்தப்பக்கத்திலே வாடகைக்கு வீடு கிடைக்காது......
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-பிப்-202016:43:22 IST Report Abuse
D.Ambujavalli ‘ஹூம்.... நம்ம ஊர்லே இப்படி எதுவும் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சு விடுகிறார்கள் குடிமகன்கள் தினமும் காசைன்னா கொட்டித் தொலைக்க வேண்டியிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X