பொது செய்தி

தமிழ்நாடு

பிகில் சம்பள விவகாரம்: ரெய்டு; ரூ.77 கோடி பறிமுதல்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (85)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: பிகில் படத்தில் விஜய் பெற்ற சம்பள விவகாரம் தொடர்பாக வருமான வரி துறையினர் நடத்திய ரெய்டில் ரூ.77 கோடி பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது. மதுரை, சென்னை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது.






மதுரையை சேர்ந்தவர், 'பைனான்சியர்' அன்புச்செழியன். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ' கோபுரம் பிலிம்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அன்புச்செழியன், ஆண்டவன் கட்டளை, மருது, தங்கமகன் உட்பட சில படங்களை தயாரித்து உள்ளார். சில படங்களுக்கு கடன் உதவியும் செய்துள்ளார். இந்நிலையில், அவர் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரி அதிகாரிகள், சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகம், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.





இதனிடையே, சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இரண்டாவது நாளாக நடந்த சோதனையில், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.15 கோடியும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.50 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-பிப்-202012:18:44 IST Report Abuse
bal எல்லா திரை அரங்கு..களையும் கைது செய்யுங்கள்...அவர்கள்தான் கருப்பு பணவினியோகஸ்தர்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07-பிப்-202005:33:24 IST Report Abuse
 nicolethomson டேய் எவ்ளோ பணத்தை அசால்ட்டா வெச்சுருக்குற? நூறு ரூபாய் இருந்தாலே பாக்கெட்டை தொட்டு தொட்டு பாதுகாப்பேன் ,
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
06-பிப்-202020:19:06 IST Report Abuse
Rasheel வரிய புடுங்கு. ரசீதை கொடு. ஆஸ்பத்திரில சேரு. ஏழைக்கு திருப்பி கொடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X