பொது செய்தி

இந்தியா

370 நீக்கத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 73 % குறைவு

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பாதுகாப்பு படையினர் கொல்லப்படுவது 73 சதவீதம் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில், 2019 ஆகஸ்ட் மாதம் முதல் காஷ்மீரில் பொது பாதுகாப்பு கருதி 444 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 389 பேர் இன்னமும் வீட்டு காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். 2019 பிப்.,13 முதல் ஆக.,4 வரையிலான 173 நாட்களில் 82 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம் 370 விலக்கிக் கொள்ளப்பட்ட ஆக.,5 முதல் 2020 ஜன.,24 வரையிலான 173 நாட்களில் 22 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றார்.




எழுத்துபூர்வமாக அவர் அளித்த மற்றொரு பதிலில், ஆக.,5 முதல் 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 19 பேர் பயங்கரவாத தாக்குதல் அல்லது பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளனர். கள நிலவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சம்பவத்தையும் கணக்கில் கொண்டு, புள்ளி விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-பிப்-202022:29:35 IST Report Abuse
bal இந்த முப்தி மற்றும் அப்துல்லா குடும்பம் பாகிஸ்தானின் அடிமைகள்...அதே போல் குலாம் நபி அசாத் கூட...அடிமைதான்...இதுக்குமேல ராகுல் குடும்பம் கூட ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ இணைப்புதான்.
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
06-பிப்-202017:11:10 IST Report Abuse
sripa அருமை. இந்த செய்தி நமது ராணுவ வீரரின் குடும்பத்துக்கு மிகவும் ஒரு நல்ல செய்தி. ஆனால்அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த போலி அரசியல்வாதிகளை நம்பி ஏமார்ந்து விடார்த்தீர்கள். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
06-பிப்-202015:36:43 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அந்த வீரர்களை தாக்கியவர்கள் நம் நாட்டின் அணைத்து சலுகைகளையும் அனுபவித்த துரோகிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X