பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவனை செருப்பை கழற்ற வைத்த அமைச்சர்

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (91)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஊட்டி: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை துவக்கி வைக்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்ற வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை செருப்பை கழற்ற வைத்த அமைச்சர்


நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கான 'சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம்' இன்று(பிப்.,06), காலை துவங்கியது. முகாமை துவக்கி வைக்க, அமைச்சர் சீனிவாசன் , பாதுகாப்பு அதிகாரிகள், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன் , நடந்து சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்த சிறுவன் ஒருவனை அழைத்த அமைச்சர், தனது செருப்பை கழட்டி விடும்படி கூறினார். இதனையடுத்து, அந்த சிறுவனும் செருப்பை அகற்றினான். பாதுகாப்பு அதிகாரிகளும், செருப்பை சரி செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் , 48 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று முதல் முகாம் முடியும்வரை, சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி ரத்து செய்யப்பட்டது.


வருத்தம் தெரிவித்தார் அமைச்சர்


இது குறித்து அமைச்சர் சீனிவாசனிடம் கேட்ட போது; இந்த சிறுவன் எனது பேரன் வயது இருக்கும். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. தவறாக நினைத்தால் நான் வருந்துகிறேன் என தெரிவித்தார்.சிறுவன் புகார்

இந்நிலையில், சிறுவன் சார்பில் அவரின் குடும்பத்தார், மசினகுடி போலீஸ் ஸ்டேஷனில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-பிப்-202005:27:34 IST Report Abuse
D.Ambujavalli திமிர்த்தனம் அவருடன் வந்த அதிகாரிகள், சக எம் எல் ஏக்கள் யாருடைய வாரிசாவது அங்கிருந்தால் அவரை இவ்விதம் நடத்தியிருப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Rao -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-202001:05:24 IST Report Abuse
Rao Atrocious on the part of minister.He should be ped from the cabinet and SC/ST commission should take note of the incident and chargesheet the concerned minister for his behaviour.
Rate this:
Share this comment
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
06-பிப்-202023:39:10 IST Report Abuse
Vakkeel VanduMurugan அட பாவிகளா, அம்மா இருந்தப்போ 24 மணி நேரமும் குனிஞ்சிட்டே இருந்தவங்க, இப்ப செருப்பை கழட்ட கூட குனிய முடியலையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X