இந்தியாவிற்கு ஆதரவாக பாக்.,ஐ எதிர்த்து ஆப்கானில் போராட்டம்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (11)
Advertisement

இந்த செய்தியை கேட்க

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாக்., தூதரகம் முன்பு பாக்., அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.






"பாக்., ஒழிக"; "பாக்., எதிரி" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தப்பட்டது. ஆப்கான் மற்றும் காஷ்மீரின் உள்நாட்டு விவகாரங்களில் பாக்., தலையிட கூடாது, பாக்.,ல் பஸ்துன் இன மக்களின் பாதுகாப்பிற்காக போராடியதற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் பஸ்தீன் என்ற 27 வயது இளைஞர் மற்றும் அவரது ஆதரவளர்கள் 9 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.





மேலும் போராட்டக்காரர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்.,5 ம் தேதி காஷ்மீர் வீரர்கள் தினம் என்ற பெயரில் இந்தியாவிற்கு எதிரான நிகழ்ச்சியை பாக்., நடத்தி வருகிறது. 1990 முதல் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிப்பதற்காக இந்த தினத்தை பாக்., கொண்டாடி வருகிறது என குற்றம்சாட்டி உள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாக தலையிடும் வகையில் காஷ்மீர் பிரச்னையை பாக்., கையாள்வதாகவும், இதே போன்று ஆப்கானிலும் பாக்., ஆதிக்கம் செலுத்த முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானில் பாக்.,க்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால் பாக்., தூதரகம் சார்பில் காபூலில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாக்., தாலிபன்கள் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து, தொடர்ந்து ஆப்கானில் போர் பதற்றத்தை உருவாக்கி வருவதாகவும் பாக்., மீது ஆப்கன் அரசு குற்றம்சாட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-பிப்-202020:52:39 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியா அந்த அளவுக்கு ஆப்கனில் பல நற்பணிகளை செய்துள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
Hari - chennai,இந்தியா
06-பிப்-202019:43:37 IST Report Abuse
Hari உலக மக்கள் விழிப்புடன்தான் உள்ளனர் இந்தியா வெகுஜன மக்கள் விழிப்பது எப்போது.சுடலை சீமான்,உலக நாயகன்,மம்தா,பப்பு சிதம்பரம் ,கபில்சிபல் இவர்களை ஒன்றாக இன்றைய சீனாவிற்குள் அனுப்பிவிடுங்கள் ,உலகமே நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
06-பிப்-202015:35:58 IST Report Abuse
Ravi இங்கே சில கேவலமான TV கள் இருக்கின்றன இம்மாதிரி செய்திகள் எல்லாம் வராது , யோவ் " தினமலர் " செய்தி சேனல் ஆரம்பித்து தொலையேன் , ஷேர் வேண்ணா கேளு பப்ளிக் நாங்க போடறோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X