japan diamond princess ship coronavirus | 3,700 பயணிகளுடன் சொகுசு கப்பல்: 10 பேருக்கு கொரோனா பாதிப்பு| Dinamalar

3,700 பயணிகளுடன் சொகுசு கப்பல்: 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020
Share

இந்த செய்தியை கேட்க

டோக்கியோ: ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு, 'டயமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் பயணிக்கும், 3,700 பேரில், 300 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 80 வயதுள்ள முதியவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



இதையடுத்து, மற்றவர்களுக்கும் தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நோய் தொற்றுள்ள, 10 பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், அதில் இருவர் மட்டுமே ஜப்பானியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'டயமண்ட் பிரின்சஸ் கப்பலின் ஊழியர்களையும், நோய் பாதித்த பயணிகளையும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்க, ஜப்பான் சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.


latest tamil news



இந்த சொகுசு கப்பல் போல், 3,600 பயணிகளுடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு ஒரு சொகுசு கப்பல் வந்துள்ளது. அதிலிருப்பவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X