வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: ராகுல்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (41)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. என காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.







டில்லி சட்டசபை தேர்தலுக்காக சாந்தினி சவுக் பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமறார் மோடி இப்போது உரையாற்றி வருகிறார். ஆனால் 6 மாதங்களுக்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு, நாட்டின் இளைஞர்களே மோடியை பிரம்பால் அடிப்பார்கள். நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆனால் பட்ஜெட் உரையிலோ, ஜனாதிபதி உரையிலோ, மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் உரையிலோ அது பற்றி ஏதும் பேசவில்லை.





வேலைவாய்ப்பின்மை தான் தனது அரசியலுக்கு ஆக்சிஜன் போன்று வேலை செய்யும் என்பதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதை மோடி விரும்ப மாட்டார். தேசியவாதம் குறித்து பாடம் எடுக்கும் பிரதமர் தேவையில்லை. இளைஞர்களுக்கு எதனால் வேலைவாய்ப்பை தர முடியவில்லை என அவர் விளக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் 2004 முதல் 2014 வரை நாட்டில் இந்து-முஸ்லிம் பிரிவினை என்பதே இல்லை. ஆனால் அவர் குஜராத்தில் வந்து விஷத்தை பரப்பி விட்டார்.




தேசபக்தியால் ஆங்கிலேயர்களிடம் போராடி இந்தியாவில் வெண்மை புரட்சி, பசுமை புரட்சி, தகவல் மற்றும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி வளமானதாக்கினோம். தற்போது உண்மையான தேசபற்றுஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க க போகிறது. நான் அதனை நிறைவேற்றுவேன். இளைஞர்கள் வேலைவாயப்பை விரும்புகிறார்கள். ஆனால் அதை இளைஞர்களை தோட்டாக்களால் அடிக்கிறார் மோடி. மோடி ஒதுக்கி வைக்கப்படுவதை நாடு பார்க்கத்தான் போகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன்  அ. இளம் தலைவர் சற்று காலம் அரசியலிருந்து விலகி இருந்து தன் பொன் மொழிகளை நிறுத்தி கட்சியை வளரவிடுவது மிகவும் அவசியம். அந்த மாபெரும் கட்சி இப்போது நாட்டில் ஓர் சிறிய ஒட்டுண்ணி கட்சியாக மாறி இருப்பது வருத்தப்படக்கூடிய நிலை.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-பிப்-202006:03:22 IST Report Abuse
Indhuindian வேலை வாய்ப்புன்னு அவரு சொல்றது அவருக்கு வேலை வேணும்ன்னு டிவி சேனல்லெயெல்லாம் தேர்தல் தோல்விக்கு இவர்தான் காரணம்ன்னு சொல்லி இவரை மெர்ஸலாக்கி ராஜினாமா பண்ண வெச்சிட்டாங்க இப்போ வேல வெட்டி ஒன்னும் இல்லே காங்கிரஸும் மறுபடியும் இவரை தலைவராக்கற மூட்ல இல்லே அதனால தான் இந்த மாதி பினாத்தல்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-பிப்-202005:47:41 IST Report Abuse
oce மனைவி இணைவி துணைவி யோடு அணைவியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒன்றை பல பேருக்கு பங்கிட்ட பரோபகாரி வாழ்க்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X