காங்கிரஸ்போல் இல்லாமல் வேகமாக செயல்படுகிறோம்; லோக்சபாவில் மோடி

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (52)
Advertisement
PMmodi, loksabha, farmers, presidentspeech, opposition, gandhi,  ayodhya, employment, பிரதமர்மோடி, ஜனாதிபதி உரை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நீண்ட காலமாக தீர்க்கப்படாத மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்துள்ளோம் என பிரதமர் மோடி லோக்சபாவில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ' காந்தி, காந்தி' என கோஷமிட்டனர்.
சில நிமிடங்கள் நிலவிய கூச்சலுக்கு பின்னர் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

எதிர்க்கட்சிகளுக்கு மஹாத்மா காந்தி டிரெய்லராக இருக்கலாம். எங்களுக்கு அவர் வாழ்க்கை. புதிய இந்தியாவிற்கான அடிதளத்திற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நுழையும் போது அவரது உரை இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி உரை, நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்க உறுதி பூண்டுள்ளேன்.


இதுவெல்லாம் நடந்திருக்குமா ?மத்திய அரசுக்கு இவ்வளவு அவசரம் ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கின்றன.பழைய முறைப்படி நாங்கள் செயல்பட்டிருந்தால், எங்களால் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியிருக்க முடியாது. முத்தலாக் சட்டத்தால், இன்னும் பல முஸ்லிம் பெண்கள் அவதிப்பட்டிருப்பர். ராமர் கோயில் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்காது. கர்தார் வழித்தடம் சாத்தியம் ஆகியிருக்காது. இந்தியா வங்கதேசம் இடையிலான எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டிருக்காது.காங்கிரஸ் வழியை பா.ஜ., பின்பற்றாதது எங்களுக்கு பெருமையாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க திடங்களை செயல்படுத்தி உள்ளோம்.

ஆனால், தற்போது அரசு அதிவிரைவாக செயல்படுகிறது. நிர்வாகத்தில் உறுதி மற்றும் தீர்க்கமான முடிவு எடுப்பது தேவைப்படுகிறது.காங்., ஆட்சியில் பினாமி சட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 70 ஆண்டுகளில், தற்போதைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மோசமாக இருந்தது.


விவசாயிகள் நலன்


நாங்கள் அதிகவேகமாக செயல்பட்டோம். 37 கோடி மக்களுக்கு தற்போது வங்கிக்கணக்கு, 13 கோடி பேருக்கு காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். டில்லியில், முறைப்படுத்தப்படாத 1700 குடியிருப்புகள் முறைப்படுத்தப்பட்ட.து. நாங்கள் தான் சிறப்பு சட்டத்தை ரத்து செய்தோம். முஸ்லிம் பெண்களுக்கு உரிமை கொடுத்தோம். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, அரசியல் பாதித்தது.வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஆட்சி புறக்கணித்தது. வெறும் போட்டோ எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. தற்போது, அந்த பகுதிகள், வளர்ச்சி கேந்திரமாக மாறியுள்ளது. வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. புதிய இந்தியாவையும், அதன் கொள்கைகளையும் உலக நாடுகள் பார்த்து கொண்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழங்கிய உறுதிமொழியை சிலர் மறந்துவிடுவர். விவசாயிகள் மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அவர்களுக்கான நிதியுதவி கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் பலன்பெறுவார்கள்.

இனாம் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்யலாம். சோலார் பேனர் திட்டங்கள், கிஷன் கிரெடிட் கார்டுகள், விவசாயிகளுக்கு பயன்தரும். குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினோம்.


விமர்சனங்களை வரவேற்கிறேன்எனது அரசு மீதான விமர்சனத்தை வரவேற்கிறேன். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது விமர்சனம் இல்லை. எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. எங்களுக்கு நீண்ட கால லட்சியம் உள்ளது. அதனை நோக்கி நாங்கள் உழைக்கிறோம். உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். முத்ரா மற்றும் ஸ்டார்ட் ஆப் திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும். முத்ரா திட்டத்தின் கீழ் 70 சதவீத பெண்கள் கடன் பெற்றுள்ளனர். நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். விலைவாசி கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க, பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


ஓட்டு வங்கி அரசியல்இந்திய முஸ்லிம்கள் மத்தியில், பயத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.காங்கிரஸ், ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக காங்., பயன்படுத்துகிறது. ஆனால், எங்களை பொறுத்தவரை அவர்களை நாங்கள் இந்தியர்களாக கருதுகிறோம். அனைத்து இந்தியர்களையும் சமமாக பாவிக்கிறோம். அரசியல் சாசனத்தை மீறியுள்ள காங்கிரஸ், இரட்டை வேடம் போடுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து போராட்ட சூழ்நிலையை அக்கட்சி உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னரும், இதுபோன்ற சூழ்நிலையை அக்கட்சி உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.


காந்தி கொள்கையை மறந்த காங்.,


பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக இந்தியாவை, நேரு பிரித்தார். பாக்., சிறுபான்மையினர் பற்றி காங்கிரஸ் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. நாடு பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை, அந்நாடு மோசமாக நடத்தியது. அவர்களுக்கு உதவாத காங்கிஸ் கட்சியை,அக்கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மஹாத்மா காந்தியின் கொள்கைகளை, நீண்ட நாட்களுக்கு முன்னரே, காங்கிரஸ் மறந்துவிட்டது.


பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு உதவி செய்ய நேரு விரும்பினார். அரசியல்மாண்புகளை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். எந்த இந்திய குடிமகனின் குடியுரிமையையும் சிஏஏ பறிக்காது.இந்த சட்டத்தால், எந்த ஒரு ஹிந்து அல்லது முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபரும் பாதிக்கப்பட மாட்டார். அரசியல் லாபத்திற்காக சிறுபான்மையினரை தவறாக காங்கிரஸ் வழிநடத்துகிறது. 1984 ல் நடந்த சீக்கிய கலவரத்தில் ஈடுபட்டவர்களை அக்கட்சி முன்னிலைபடுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
07-பிப்-202003:25:12 IST Report Abuse
ashak நாட்டை குட்டிசுவராக ஆக்குவதில்
Rate this:
Share this comment
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202023:48:49 IST Report Abuse
Ravi டெல்லி..... அகமதாபாத்.. புல்லட் ரயில் ???? வேகத்தில்
Rate this:
Share this comment
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202023:47:39 IST Report Abuse
Ravi ஆமாம் ஆமாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X