பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருந்தக கட்டடத்தை எப்ப திறப்பீங்க? கிராம விவசாயிகள் கேள்வி

Added : பிப் 06, 2020
Advertisement

கரூர்: க.பரமத்தி அருகே, கால்நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஆறு மாதங்கள் ஆகிறது. அதை திறக்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், நடந்தை கிராம பஞ்., துலுக்கம்பாளையம் பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 30 லட்ச ரூபாய் மதிப்பில் கால்நடை மருந்தகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஆறு மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால், கால்நடை மருந்தகம் தற்காலிகமாக பஞ்., கட்டடத்தில், சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: க.பரமத்தி வட்டாரத்தில் ஆடு வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. சில சமயங்களில், பட்டியில் அடைத்து வைக்கப்படும் ஆடுகளை, வெறி நாய்கள் கடித்து கொன்று விடுகின்றன. காயம்பட்ட ஆடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கவே, கால்நடை மருந்தகம் கட்ட கோரிக்கை வைத்தோம். ஆனால், புதிய கட்டடம் கட்டப்பட்டும் திறக்கப்படவில்லை. இதனால், கட்டடம் சேதமடையும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை கட்டடம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் முடிந்த நிலையில், புதிய மருந்தக கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X