பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் பஞ்., யூனியன் முதல் கூட்டம்: தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Added : பிப் 06, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் பஞ்., யூனியன் முதல் கூட்டம், நேற்று நடந்தது. அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்தில் கடந்த, 27 மற்றும் 30ல் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கரூர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்., தலைவர், எட்டு பஞ்., யூனியன் தலைவர் பதவிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியது. கரூர் பஞ்., யூனியனில் உள்ள, 13 வார்டுகளில், அ.தி.மு.க., ஒன்பது இடங்களிலும், தி.மு.க., இரண்டு

கரூர்: கரூர் பஞ்., யூனியன் முதல் கூட்டம், நேற்று நடந்தது. அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் கடந்த, 27 மற்றும் 30ல் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கரூர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்., தலைவர், எட்டு பஞ்., யூனியன் தலைவர் பதவிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியது. கரூர் பஞ்., யூனியனில் உள்ள, 13 வார்டுகளில், அ.தி.மு.க., ஒன்பது இடங்களிலும், தி.மு.க., இரண்டு இடங்களிலும், பா.ம.க., மற்றும் சுயேச்சை தலா, ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, பஞ்., யூனியன் தலைவராக, அ.தி.மு.க., வை சேர்ந்த பாலமுருகனும், துணைத்தலைவராக தங்கராஜூம் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்., யூனியனின் முதல் கூட்டம், வெண்ணைமலையில் உள்ள அலுவலகத்தில், தலைவர் பாலமுருகன் தலைமையில் நேற்று நடந்தது. அங்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க., கவுன்சிலர் கணபதி, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை எப்படி கூட்டரங்கில் வைக்கலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் வைக்க வேண்டும்,'' என்றார். அதற்கு பதிலளித்த பாலமுருகன், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை வைக்க, சட்டரீதியாக அனுமதி உண்டு,'' என்றார். அதைக் கேட்ட கணபதி, ''ஓராண்டில், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடும். அப்போது, கருணாநிதி படத்தை வைப்போம்,'' என்றார். பிறகு, ஜெயலலிதா படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கணபதி, வசந்தி வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, கூட்டம் தொடர்ந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச் சாவடிகளில் செய்யப்பட்ட பணிகள், பதவியேற்பு செலவுகளுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் தங்கராஜ், பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X