பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தாக்குதல் எதிரொலி: நிலக்கடலை சாகுபடி பாதிப்பு

Added : பிப் 06, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, வெள்ளியணை சுற்று வட்டார பகுதிகளில், பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், 8,000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்தான நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பொதுவாக நிலக்கடலையை, ஆறு மற்றும் ஏரிப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்வது இல்லை. மழையை நம்பி மட்டும் சாகுபடி செய்யப் படுகிறது. கடந்தாண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட, அதிகளவில் பெய்தது. இதனால், வெள்ளியணை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில், நிலக்கடலையை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால், எதிர்பார்த்த அளவில் குறிப்பிட்ட நாட்களில், நிலக்கடலை பயிர்கள் வளர்ச்சியை எட்டவில்லை என, விவ சாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து, வெள்ளியணை விவசாயிகள் கூறியதாவது: மழை பெய்ததால், போர்வெல்லில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் உள்ளது. இதை நம்பி நிலக்கடலையை பயிரிட்டோம். மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும், நிலக்கடலை இன்னும் முற்றவில்லை. யூரியா உள்ளிட்ட நோய் காக்கும் மருந்துகள் தெளித்தும் பயன் இல்லை. வழக்கமாக ஏக்கருக்கு, 20 மூட்டைகள் முதல், 30 மூட்டைகள் கிடைக்கும். ஆனால், இரண்டு மாதங்கள் ஆன பிறகும், நிலக்கடலை செடியில் பூக்கள் கூட வரவில்லை. நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. எந்த விதமான நோய் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதனால், காய்கள் முற்றவில்லை. மூன்று மாதங்களுக்கு பிறகு, அறுவடை செய்தால் கூட ஏக்கருக்கு, 15 மூட்டைகள் கிடைப்பது சிரமமாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X