பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 06, 2020
Share
Advertisement

குப்பையை அகற்றணும்! கரூர் அருகே, வெண்ணைமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், பொதுமக்கள், குப்பை நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. இதனால், குப்பை அழுகாத வகையில், நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பி.எஸ்.என்.எல்., பெட்டி சேதம்: கரூர் அருகே, காதப்பாறை பஞ்., அலுவலகம் அருகில் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள, பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள பெட்டியில் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதமடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டியை மாற்ற வேண்டும்.

செயல்படாத சிக்னல்; ஓட்டுனர்கள் அவதி: கரூர் அருகே, வாங்கப்பாளையம் பிரிவு சாலையில் தனியார் சிமென்ட் ஆலை அருகில், போக்குவரத்தை சீர் செய்ய தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக அது சரிவர இயங்குவதில்லை. கரூரில் இருந்து சேலம், நாமக்கல் பகுதிக்கு, நாள் தோறும் பஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால், வாங்கப்பாளையம் பிரிவு சாலையில் அமைக்கப் பட்டுள்ள தானியங்கி சிக்னலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறந்த நிலையில் வால்வு தொட்டி: வெங்கமேடு, எஸ்.பி., காலனியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய வால்வு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது வைக்கப்பட்டிருந்த சிமென்ட் மூடி பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால், வால்வு தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதனால், புதிய சிமென்ட் மூடியை, வால்வு தொட்டி மீது வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டி: கரூர்-திண்டுக்கல் பழைய சாலையில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப் பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. குழாய்களும் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X