பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் அகற்றப்பட்ட மரங்கள் இன்று பொது ஏலம்

Added : பிப் 06, 2020
Advertisement

குளித்தலை: தோகைமலை யூனியன், புத்தூர் பஞ்., சின்னபுத்தூரில், 85 ஏக்கரில் குளம் உள்ளது. இதில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஏரியில் கருவேலமர வேர்க்கட்டைகள் முறைகேடாக இயந்திரம் மூலம் எடுத்து கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த, 29ல் செய்தி வெளியானது.இந்நிலையில், சின்னபுத்தூர் குளத்தில் அகற்றப்பட்ட மரங்கள், இன்று ஏலம் விடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பஞ்., தலைவர் தணிகாசலம் கூறியதாவது: சின்னபுத்தூரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம் தூர் வாரப்பட்டது. இதிலிருந்து அகற்றப்பட்ட மரங்களை பொது ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. முறையாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை, 3.00 மணியளவில் பஞ்.. அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X