பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி பெற மோகனூரில் ஹயக்ரீவர் லட்சார்ச்சனை துவக்கம்

Added : பிப் 06, 2020
Advertisement

மோகனூர்: பள்ளி மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி பெற, மோகனூரில் ஹயக்ரீவர் லட்சார்ச்சனை துவங்கியுள்ளது. மோகனூரில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு, மாணவ, மாணவியர் சகலவித கல்வியிலும் வெற்றியடையவும், தொழில் ஸ்தாபனங்கள் வளர்ச்சி பெறவும், நாட்டில் ஆய கலைகள் யாவும் வளம் பெறவும், இயற்கைச் சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தில் பொழிந்து, நதி நீர் வளம் பெற்று, விவசாயம் மேன்மையடையவும், உலக நன்மைக்காகவும், ஆண்டு தோறும் லட்சார்ச்சனை பெருவிழா நடக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு விழா, நேற்று துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, பல்வேறு சிறப்பு யாகத்துடன் ஹயக்ரீவருக்கு, திருமஞ்சன சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை துவங்கியது. தினமும், காலை, மாலை, இரவில், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை, லட்சார்ச்சனை, வரும், 9 வரை நடக்கிறது. அன்று காலை, 7:00 மணிக்கு, யாகம், லட்சார்ச்சனை நிறைவு நடக்கவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு, அனைத்து புண்ணிய காலம், ஒரு சங்கல்பம், ஹயக்ரீவர் சரஸ்வதி சாவித்திரி பெற்று, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடக்கிறது. அதையடுத்து, பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் திருச்சுற்று வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், புஷ்பாஞ்சலி, கூட்டுப் பிரார்த்தனை, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ரமேஷ், செயல் அலுவலர் கலைவாணி, ஊர் மக்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X