பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்: 4ம் தவணை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : பிப் 06, 2020
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம், 2018, டிச., 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், விவசாயிகள் பயிர் சாகுபடி தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவி தொகை, விவசாய குடும்பங்களுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 வீதம், ஆண்டுக்கு, மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 84 ஆயிரத்து 262 விவசாயிகளுக்கு, முதல் தவணையாக, 16.85 கோடி ரூபாய், 83,556 விவசாயிகளுக்கு, இரண்டாம் தவணையாக, 16.71 கோடி ரூபாய், 79,042 விவசாயிகளுக்கு, மூன்றாவது தவணையாக, 15.81 கோடி ரூபாய் என, மொத்தம், 49.37 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, நான்காம் தவணை பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு, மத்திய அரசு வலைத்தளத்தில் பெயர் இருக்க வேண்டும். இதுவரை, மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகள், உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி, ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தில், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X