பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 06, 2020
Advertisement

குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்: குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுப்பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வடிகாலில் கலந்து வீணாகிறது. இந்நிலை பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், இதுகுறித்து புகார் தெரிவித்தும் பலனில்லை. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் பிரசாரம் செய்துவரும் வேளையில், இது போன்று தண்ணீர் வீணாவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
பல்லாங்குழி சாலை; விபத்து அச்சம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், செக்காரப்பட்டி மயானத்திலிருந்து, கோக்கலை செல்லும் சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக வாகன ஓட்டிகள் வேகமாக சென்றால், கீழே விழுந்து எழுந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகின்றது. ஜல்லிககற்கள் பரவி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பாதுகாப்பற்ற பொது கிணறு: திருச்செங்கோடு அருகே, கணக்கம்பட்டியில் கடந்த பல வருடங்களுக்கு முன், குடியிருப்புகள் அருகே பொதுக்கிணறு அமைக்கப்பட்டது. இதுவரை கம்பிவளையம் அமைக்கப்படவில்லை. இங்குள்ள குழந்தைகள் இப்பகுதிக்கு சென்றால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குடியிருப்புகளில் வளர்க்கும் கால்நடைகள் கிணற்றுக்குள் விழவும் வாய்ப்புள்ளது. எனவே, கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழாய் உடைப்பு சரி செய்யணும்! காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பட்டணம், புதுப்பட்டி மற்றும் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கு, நாமகிரிப்பேட்டையில் தான் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது. நாமகிரிப்பேட்டையில் இருந்து சீராப்பள்ளிக்கு செல்லும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஆத்தூர் பிரதான சாலையில், ஆறுபோல் குடிநீர் செல்கிறது. ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

குடிமகன்களால் பயணிகள் பாதிப்பு: பள்ளிபாளையம் அடுத்த, காவேரி பஸ் நிறுத்தத்தில் சிலர் மது அருந்தி விட்டு, போதையில் படுத்துக் கொள்கின்றனர். மேலும், அங்கேயே மது அருந்துகின்றனர். தற்போது, இது, குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பஸ்சுக்காக சாலையில் தான் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிழற்கூடம் இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது. 'குடி'மகன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X