பொது செய்தி

தமிழ்நாடு

எலச்சிபாளையத்தில் விவசாயிகள் ஆலோசனை

Added : பிப் 06, 2020
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் பேசியதாவது: மேட்டூர் அணைக்கு, 120 அடிக்கு மேல் தண்ணீர் வரும் காலகட்டத்தில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. அந்த உபரிநீரை பாசனமற்ற பகுதிகளான காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு பகுதிகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற திட்டம் தமிழக அரசால் தீட்டப்பட்டது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இத்திட்டத்தை துறையூர் வரை நீட்டிக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் அப்பணிகள் இதுவரை நடைபெறவில்லை. இத்திட்டத்தை வலியுறுத்தி, எலச்சிபாளையத்தில், வரும், 17ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X