பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கல்

Added : பிப் 06, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், 25 துப்புரவு பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. குமாரபாளையம் நகராட்சியில், தனியார் துப்புரவு பணியாளர்கள், 65 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு உடை, கையுறை, தலைக்கவசம், காலணிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி, ஆணையாளர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடந்தது. சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், ''தனியார் துப்புரவு பணியாளர்களுக்கு, முதற்கட்டமாக அரசு சார்பில், 25 பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள, 40 பணியாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,'' என்றார். நகர, அ.தி.மு.க., செயலாளர் நாகராஜன், துணை செயலர் திருநாவுக்கரசு, பொறியாளர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X