பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பேராசிரியருக்கு மத்திய அரசு விருது

Added : பிப் 06, 2020
Advertisement

குமாரபாளையம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நுண்ணுயிர்ப் பொருள் கண்டு பிடித்த குமாரபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜோதிக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, அவர் கூறிதாவது: இயற்கை தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு ரசாயன பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும் நூல்களை பதப்படுத்தும் மூலப்பொருள் கண்டுபிடித்தேன். ஜவுளி நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை, காகித தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உதவிடும் வகையிலும், மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ளதாலும், இந்த மூலப்பொருள் கண்டுபிடிப்புக்காக மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன். கடந்த, 30ல் டில்லியில் நடந்த விழாவில், சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் விருது வழங்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சரங்கி வழங்கினார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X