நகர தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்

Added : பிப் 06, 2020
Share
குமாரபாளையம்: குமாரபாளையம் நகர, தி.மு.க., பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் நகர, தி.மு.க., செயலராக இருந்த வெங்கடேசன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலரும், நகர்மன்ற முன்னாள் தலைவருமான சேகர், நகர, தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாதுரையின்

குமாரபாளையம்: குமாரபாளையம் நகர, தி.மு.க., பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் நகர, தி.மு.க., செயலராக இருந்த வெங்கடேசன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலரும், நகர்மன்ற முன்னாள் தலைவருமான சேகர், நகர, தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாதுரையின் திருவுருவச்சிலைக்கும், கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X