தொழிற்சங்க மையம் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்க மையம் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 06, 2020
Share

நாமக்கல்: இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட உதவிச் செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் பட்ஜெட், விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத ஏழைகளை ஏறி மிதிக்கும் பட்ஜெட், முறை சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. எல்.ஐ.சி., போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் பட்ஜெட்டாக மத்திய அரசின் புதிய பட்ஜெட் அமைந்துள்ளது என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X