பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை தொடர் சரிவு எதிரொலி: நாமக்கல் பண்ணையாளருக்கு ரூ.60 கோடி நஷ்டம்

Added : பிப் 06, 2020
Advertisement

நாமக்கல்: ஐதராபாத் மண்டலத்தில் விலை குறைப்பு எதிரொலியால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. தினமும், நான்கு கோடி ரூபாய் வீதம், 15 நாட்களில், பண்ணையாளர்கள், 60 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 3.75 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். நவ., 1 முதல், 'நோ மைனஸ் நெக் ரேட்' என்ற நடைமுறையை, 'நெக்' அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது, தினசரி விலை நிர்ணயமாக இருந்தும், வாரம், மூன்று முறை மட்டுமே விலை மாற்றம் செய்து வருகின்றனர். கடந்த, ஜன., 1ல், 448 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, மறுநாள், ஐந்து காசு உயர்த்தப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக குறைத்து, 11ல், 395 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, 23ல், 380 காசு, 25ல், 365 காசு, 27 ல், 355 காசு, என, ஐந்து நாட்களில், 25 காசு சரிந்தது. இதற்கிடையில், 31ல், ஐந்து காசு அதிகரித்து, 360க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், 10 காசும், நேற்று, 15 காசும் என, இரண்டு நாட்களில், 25 காசு சரிந்துள்ளது. இது, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தற்போது, ஐதராபாத் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 30 காசு குறைக்கப்பட்டுள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்திலும், விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லை என்றால், அங்கிருந்து முட்டைகள், தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்துவிடும். அதன் மூலம், நமது முட்டைகள் விற்பனையின்றி தேக்கம் அடைந்து, பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அவற்றை கருத்தில் கொண்டே, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு முட்டை உற்பத்தி செய்வதற்கு, 400 காசு செலவாகிறது. அதற்கு மேல், கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தால் மட்டுமே, பண்ணையாளர்களுக்கு கணிசமாக லாபம் கிடைக்கும். ஆனால், கடந்த, 15 நாட்களில், நாள் ஒன்றுக்கு, நான்கு கோடி ரூபாய் வீதம், 60 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது தெரியவில்லை. தைபூசம் முடிந்து, நான்கு நாட்களுக்கு பிறகே, முட்டை கொள்முதல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X