மொபைல் போன் கோபுரம்: எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் கோபுரம்: எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

Added : பிப் 06, 2020
Share

நாமக்கல்: நாமக்கல்லில், தனியார் மொபைல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாமக்கல், அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வீட்டு மாடியில் தனியார் மொபைல் போன் நிறுவனத்திற்கு கோபுரம் அமைக்க வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன அதனால், தங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட வீட்டை நேற்று மாலை, 4:30 மணியளவில் முற்றுகையிட்டனர். உரிமையாளரிடமும், கோபுரம் அமைக்கும் அலுவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். நாமக்கல் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X