இந்துவாக காட்டிக் கொள்ள ராகுலுடன் கெஜ்ரி போட்டி

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி : டில்லி தேர்தல் நடக்க உள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் பல யுக்திகளை கையாண்டு வருகிறார். இதில் தன்னை தீவிர இந்து எனக் காட்டிக் கொள்ள அவர் முயற்சிப்பது முதன்மையானதாக உள்ளது.






ஓட்டு வங்கி அரசியலுக்காக ஷாஹீன் பாக் பகுதியில் போராடுபவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஆதரவாக கெஜ்ரிவால் செயல்படுவதாக பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் குற்றம்சாட்டியது முதல், தன்னை அனுமன் பக்தன் என ஒவ்வொரு பேட்டியிலும் கெஜ்ரிவால் கூறி வருகிறார்.

டிவிக்களுக்கு அளிக்கும் பேட்டிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தானும், தனது குடும்பத்தினரும் தினமும் அனுமன் சாலிசா ஓதுபவர்கள் என்பதையும், தாங்கள் இந்துக்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார்.

இந்துத்துவா அடையாளத்தின் காரணமாகவே மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக கெஜ்ரிவால் கருதுவதால், அதே யுக்தியை தானும் கையாள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தன்னை பயங்கரவாதி என கூறிய பா.ஜ., எம்.பி.,யின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து பேசிய போது கெஜ்ரிவாலும், அவரது மகளும், நாங்கள் இந்துக்கள், தினமும் அனுமன் சாலிசா, பகவத் கீதை படிப்போம். பயங்கரவாதிகள் இப்படி செய்வார்களா என பதில் கேள்வி எழுப்பினர். பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டிற்கும் இவர்களின் பதிலுக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் பலரின் மனதிலும் எழுந்தது.




காங்., எம்.பி.,யான ராகுலோ, லோக்சபா தேர்தல் பிரசாரம் முதலே தானும், தனது குடும்பமும் சிவ பக்தர்கள் என கூறி வருகிறார். லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த போதிலும், டில்லி தேர்தலை மனதில் வைத்து திபெத்தில் உள்ள மானசரோவருக்கு யாத்திரை சென்று வந்தார்.





ஷாஹீன் பாக் போராட்டத்தை பா.ஜ., தூண்டி விடுவதாக கெஜ்ரிவால் கூறினாலும், அவரது கட்சியை சேர்ந்த 2 முஸ்லிம் எம்எல்ஏ.,க்கள் இந்த போராட்டத்தில் தீவிரமாக இருந்த போதிலும் அது தெரியாதது போல் காட்டிக் கொண்டார்.

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம்கள் மோடி அரசிற்கு எதிராக உள்ளதால், டில்லி தேர்தலில் பா.ஜ.,விற்கு மாற்றாக தன்னை தேர்ந்தெடுக்கவே அதிக வாய்ப்புள்ளது என்பது கெஜ்ரிவாலின் கணக்கு. அதே சமயம் தன்னை இந்து என அடையாப்படுத்திக் கொண்டால் பா.ஜ.,விற்கு ஆதரவாக இருக்கும் இந்துக்களின் ஓட்டுக்களையும் பெற்று விடலாம் என நினைக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
06-பிப்-202023:02:42 IST Report Abuse
konanki தமிழ் அநீதி நல்ல முயற்சி ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202019:56:26 IST Report Abuse
SELF தினமும் பகவத் கீதை படிக்கிறீர்களா? பகவத் கீதை படிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகும் அப்படியானால் உங்களுக்கு வேறு வேலை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-202019:00:19 IST Report Abuse
நக்கல் கவுல் பிராமணன் - பாகம் 2...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X