ராகுல் ஒரு டியூப் லைட்: மோடி பதிலடி

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (113)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் இளைஞர்கள் மோடியை பிரம்பால் அடிப்பார்கள் என்ற ராகுலின் குற்றச்சாட்டுக்கு லோக்சபாவில் பேசிய போது பதிலளித்த பிரதமர் மோடி, ராகுலை டியூப் லைட் என விமர்சித்தார்.





சமீபத்தில் மோடி சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்த ராகுல், டில்லியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய போது, வேலைவாய்ப்பை வழங்காவிட்டால் இளைஞர்களே மோடிடைய பிரம்பால் அடிப்பார்கள் என தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றி மோடி, ராகுலுக்கு சுளீர் என பதிலடி கொடுத்துள்ளார்.

மோடி பேசுகையில், 6 மாதங்களில் இளைஞர்கள் என்னை பிரம்பால் அடிப்பார்கள் என காங்., தலைவர்கள் பேசியது உண்மை தான். அதற்கு ஆட்களை சேர்ப்பது கடினம் தான். அதற்கு தயாராக 6 மாதம் தேவை தான். அதனால் 6 மதங்கள் சரியான நேரம் தான். ஆனால் நானும் ஒன்றை முடிவு செய்விட்டேன், அடுத்த 6 மாதங்களில் எனது சூர்ய நமஸ்காரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளேன்.




கடந்த 20 ஆண்டுகளாக அவதூறு பேச்சுக்களை தாங்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டுள்ளேன். அவர்களின் அடியை தாங்கும் அளவிற்கு, அதிக சூரிய நமஸ்காரங்களால் எனது முதுகையும் போதுமான அளவிற்கு வலிமையாக்கி வைத்துக் கொள்கிறேன். எனது உடற்பயிற்சியை அதிகரித்துக் கொள்ள எனக்கு 6 மாதம் கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.





அப்போது எழுந்து குறுக்கிட்ட ராகுல், அவையில் அமளி நிலவுவதால் நீங்கள் பேசியதை சரியாக கேட்க முடியவில்லை என்றார்.





அதற்கு பதிலளித்த மோடி, நான் 30 முதல் 40 நிமிடங்களாக இப்போது பேசி உள்ளேன். ஆனால் இப்போது தான் கரன்ட் வந்துள்ளது. சில டியூப்லைட்கள் இப்படி தான் வேலை செய்கின்றன என்றார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்ததை அடுத்து, ராகுல் வேகமாக அமர்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-பிப்-202019:03:13 IST Report Abuse
Malick Raja இந்தியா சுதந்திரமடைய ஜவஹர்லால் நேரு அரும்பணியாற்றியவர் . அவரையே தனது பதவிக்காக நாட்டை பிரித்தார் என்று எந்த ஒரு இந்திய குடிமகனாவது சொல்வானா ? என்றால் சொல்ல மாட்டான் .. காரணம் நேரு லண்டனில் படித்தபோது கல்லூரியின் நான்கு வாயில்களிலும் ஒவ்வொரு கார் காத்திருக்குமாம் இது போன்ற வசதி லண்டன் அரச குடும்பத்திற்கு கூட இருக்கவில்லை .. அவ்வளவு வசதிகள் இருந்தும்கூட நாட்டின் சுதந்திரத்திற்க்காக பல்லாண்டு காலம் சிறைவாசம் சென்ற பெருமைக்குரியவர் ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-பிப்-202012:50:18 IST Report Abuse
Malick Raja இரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் டீ யை கூவி கூவி விற்ற அறிவின் வெளிப்பாட்டை தடுக்கவே தவிர்க்கவோ முடியாது .. தக்கார்த்தகவிலாறென்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் .. அதில் மோடிஜிக்கு எப்படி விதிவிலக்கு இருக்கமுடியும் காரணம் கல்லூரி போகாமலே அரசியலறிவு சிறப்பு பாடம் படித்து தெரியவர .. திருமணமாகி மனைவியை வாழாவெட்டியாக வைத்திருப்பவர் போன்ற சிறப்பு தகுதிகள் பல கொண்ட நமது பிரதமர் இப்படி பேசுவதுதான் சரியாக இருக்கும் .. மங்குணிகள் ,மங்கிகள் ,மங்கிபாத் கேட்பவர்களும் சபாஷ் என்று சொல்வதும் சரியாகத்தான் இருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-பிப்-202012:41:25 IST Report Abuse
Rafi ஆறாண்டுகளாக வேலைவாய்ப்புகளை உருவாக்காமல்,இழக்க வைத்துவிட்டேன், அடுத்த 6 மாதத்தில் வேலை வாய்ப்புகளை அதிகம் உருவாக்க முயற்சி செய்கின்றேன் என்று சொல்வார் என்று மக்கள் எதிர் பார்த்த நிலையில், என்ன அந்த அளவுக்கெல்லாம் சிந்திக்கும் திறன் கிடையாது, தேவையானால் உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக்கி கொள்கின்றேன் என்று சொல்கின்றார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X