இந்தியாவிடம் பாடம் கற்க இம்ரானுக்கு அறிவுரை: சீனாவில் தவிக்கும் பாக்., மாணவர்கள்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (23)
Advertisement
CoronaVirus, Pakistan, Students, India, கொரோனாவைரஸ், பாகிஸ்தான், மாணவர்கள், தவிப்பு

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவின் வுஹான் நகரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இங்கு ஆங்கிலத்தில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் இங்கு குறைவு. இதனால், ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்நகரை நோக்கி படையெடுக்கின்றனர்.




இதனடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் மருத்துவம் படிக்க, வுஹான் நகரை விரும்பித் தேர்வு செய்கின்றனர். மருத்துவ மாணவர்களின் சொர்கபுரியாக இருந்த வுஹான் நகரை, கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது. மக்கள் வெளியே நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்த நகரில் தங்கியிருந்த, தங்கள் நாட்டு மாணவர்களையும் மக்களையும் அனைத்து நாடுகளும் மீட்டு வருகின்றன. இந்தியா, வுஹானிலிருந்து, 700-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வந்துள்ளது.

பாகிஸ்தான் சீனாவின் நட்பு நாடு என்பதால், 'தங்கள் மாணவர்களை அங்கிருந்து மீட்டுவர முடியாது' என, அறிவித்துள்ளது. சீனாவின் நட்புக்காக மாணவர்களின் உயிரை பாகிஸ்தான் பணயம் வைப்பதாக விமர்சனம் எழுந்தும், இம்ரான் கான் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.





நால்வருக்கு கொரோனா

வுஹான் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த, 800 மாணவர்கள் உள்ளனர். அவர்களில், நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வுஹானில் உள்ள, பாகிஸ்தான் மாணவர்கள், 'வுஹானிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள். வங்கதேசமும் தம் மக்களை மீட்டுவிட்டது. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் மரணத்தை தழுவினாலும் கவலையில்லை என, பாகிஸ்தான் அரசு நினைக்கிறது. இந்தியர்களிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்' என, பாகிஸ்தான் அரசை கடுமையாகக் குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Elangovan - Thiruvarur,இந்தியா
07-பிப்-202010:51:38 IST Report Abuse
R Elangovan இந்தியாவிலுள்ள மருத்துவ வசதிகள் பாகிஸ்தானிடம் இல்லை என்ற பயம்தான் காரணம் அதனால்தான் சீனா நட்பு நாடு என்று இம்ரான் மழுப்புகிறார் அவர் என்ன செய்வார் பாவம் இதுதான் உண்மை. இனியாவது பாக் தன் அயலுறவுக்கொள்கையில் இணக்கமாக செயல்பட்டு நாட்டின் உட்புற கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்துவதே மனுதர்மம் என்பதை உணரும் தருணம் வந்துவிட்டது என்பதை பாக் உணர்ந்து செயல்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-பிப்-202010:30:16 IST Report Abuse
கல்யாணராமன் சு. பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால், சீனாவில் இருக்கும் மாணவர்களை திரும்ப அழைத்து வருவது பரிசீலிக்கப்படும் என்று நேற்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பத்திரிக்கைகள் பேட்டியில் அறிவித்திருக்கிறார் ......... இதன் மூலம் இந்தியாவிற்கு உலகநாடுகளில் உள்ள நல்லெண்ணத்தை அதிகப்படுத்தவும் வகை செய்திருக்கிறார்கள்..... பாகிஸ்தான் செய்யவேண்டியதெல்லாம் ஒரு கோரிக்கை விடுப்பதுதான் .......அதை செய்வார்களா? செய்தால் மாணவர்கள் உயிர் பிழைப்பார்கள் ......... செய்யாவிட்டால், மாணவர்களின் உயிரும் போகும் ........... பாகிஸ்தானின் மானமும் போகும் .............
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
07-பிப்-202010:22:12 IST Report Abuse
Sampathkumar Sampath எங்க மனிதாபிமானம் உங்களுக்கு புரியாதுடா பொழப்பத்தவனுகளா. உங்களுக்கு உதவி செஞ்சா எங்களையே அடிக்க வருவீங்க. மோடி நைனா என்ன பண்ணலாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X