அம்மாவை கொன்றுவிட்டு அந்தமானில் பாய் பிரண்டுடன் சுற்றுலா: மாட்டிய மகள்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (71)
Advertisement
Bengaluru, Woman, Stab, Mother, Death, Holiday, Friend, Andamans, Cops, பெங்களூரு, பெண், தாய், கொலை, அந்தமான், சுற்றுலா, நண்பர், போலீஸ், கைது

பெங்களூரு: பெங்களூருவில் தனது தாயை கொன்றுவிட்டு அந்தமான் தீவுகளுக்கு ஆண் நண்பருடன் சுற்றுலா சென்ற மகளை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா, 33, ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த சிலநாட்களாக ஐதராபாத்தில் பணிமாறுதல் பெற்று அங்கு செல்ல இருப்பதாக கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்.,02ம் தேதி, தனது அறையில் உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்த போது, அவரது தாய் நிர்மலா மற்றும் சகோதரர் ஆகியோரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கத்தியை எடுத்து தாய் மற்றும் சகோதரரை கத்தியால் குத்திவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதில், நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்த சில மணிநேரத்தில் தனது ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவுடன் சேர்ந்து அந்தமான் தீவுகளுக்கு அம்ருதா, சுற்றுலா சென்றுள்ளார். காயமடைந்த அவரின் சகோதரர், போலீசில் புகாரளித்தார். புகாரை விசாரித்த போலீசார், அம்ருதா, அந்தமான் சென்றதை கண்டறிந்துள்ளனர். அந்தமான் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற பெங்களூரு போலீசார், இருவரையும் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில், அம்ருதாவின் தந்தை நுரையீரல் புற்றுநோயால் 2013ல் இறந்துள்ளார். இதன் சிகிச்சைக்காக அவரின் குடும்பத்துக்கு சில லட்சங்கள் கடன் தொல்லை இருப்பதாகவும், அதனால், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அம்ருதா, தாயையும், சகோதரரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள தீர்மானித்துள்ளார். அதன்படி, கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முன்னதாக நண்பருடன் சுற்றுலா செல்லவும் ஆசைப்பட்டு, அந்தமான் சென்றுள்ளார். ஆனால், அம்ருதா செய்த கொலையும், அவரின் தற்கொலை முடிவும் ஸ்ரீதர் ராவிற்கு தெரியாது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
13-பிப்-202000:46:23 IST Report Abuse
Saravanan AE இந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. மனத்தில் அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். இவளின் இந்த சகோதரர் என்ன செய்கிறார்? வாக்கு வாதம் ஏற்பட்டு இப்படி நடந்ததை சொல்வது உண்மையென்றால் தாயின் மீது குற்றம் என்று தான் சொல்ல வேண்டும். சகோதரன் மீதும் என்று கூட சொல்லலாம். இது அவளின் செய்கையை நியாயப்படுத்தாது. ஆனால் இதற்கு அவளை விட இந்த சமூகமும், நோயாளிகளுக்கு ஆதரவளிக்காத அரசுகளும் தான் முக்கிய காரணம்.
Rate this:
Share this comment
Cancel
K K KANNAN - KANYAKUMARI ,இந்தியா
11-பிப்-202010:16:26 IST Report Abuse
K K KANNAN தூக்கிலிட்டு கொள்ளுங்கள் வேணாம் இவள் இந்நாட்டிற்கு
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-பிப்-202010:53:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni சீ இதெல்லாம் பிறக்கலேன்னு எவளும் அழவே இல்லே இப்படி பெற்றதற்கு அந்த அம்மா மலடியாவே இருந்துருக்கலாம் என்று தோணுது வெறி பிடிச்ச கேவலம் இந்தப்பொண்ணு இவளை தூக்கிலேபோடாதீங்க தனிமையே வாழவாச்சு தான் செய்த குத்தம் எவ்ளோபயங்கரம் என்று எண்ணிஎண்ணியே சாவணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X