அரசியல் செய்தி

தமிழ்நாடு

அஞ்சாதே விஜய்!: காங்., சீமான் 'அட்வைஸ்'

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (162)
Advertisement
ActorVijay, ITRaid, Seeman, KSAlagiri, NTK, Congress, Support, Rajinikanth, விஜய், வருமானவரித்துறை, சோதனை, ரெய்டு, கேஎஸ்_அழகிரி, சீமான், காங்கிரஸ், நாம்தமிழர்கட்சி, ஆதரவு, அச்சுறுத்தல்

இந்த செய்தியை கேட்க

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை குறித்து, விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினி அறிக்கை விட்டால் தலைப்பு செய்தியாக வருகிறது, ஆனால் அவர் ரூ.66 லட்சம் வருமானவரி பாக்கி வைத்திருப்பது குறித்து எதுவும் பேசப்படுவதில்லை. இவ்வளவு காலம் போராடி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு என தமிழில் நடத்தப்படுகிறது. அந்த செய்தியை மறக்கடிக்கவே நேற்று (பிப்.,05) பேட்டியளித்துள்ளார். முஸ்லிம்களுக்கு பிரச்னை எனில் போராடுவேன் எனக்கூறும் ரஜினி, ஹாசிபா கொல்லப்பட்டதற்கு குரல் கொடுத்தாரா? ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி துன்புறுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்தாரா?


நல்லவர் - கெட்டவர்


நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு என அவரை மிரட்டுகின்றனர். ரஜினி நல்லவர், விஜய் கெட்டவர் என காட்ட நினைக்கின்றனர். ரஜினி18 சதவீதம் வட்டிக்கு கொடுத்துள்ளார். அன்புசெழியன் தற்போது திரைப்படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதில்லை. நான் படமெடுக்க பணம் கேட்டபோது, இப்போது பைனான்ஸ் கொடுப்பதில்லை எனக்கூறினார்.

விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. அவருக்கு இளைஞர்கள் மற்றும் மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரை அச்சப்படுத்தி வைத்தால், ரஜினி அரசியலுக்கு வரும்போது போட்டி இருந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


அஞ்சக்கூடாது


தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பாஜ., அரசு கருதுமேயானால் அது பகல் கனவாக தான் முடியும். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் விஜய் அஞ்சக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-பிப்-202015:50:52 IST Report Abuse
Sampath Kumar பணம் கொடுத்து பத்திரமாக வைக்க சொன்னதாக கேள்வி ? அய்யா சந்திரா நீ கேள்வி படத்தை அப்படியே போய் வருமானவரி துறை இடம் சொல்லு உனக்கு சன்மானம் கொடுப்பாங்க போவியா
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08-பிப்-202011:42:24 IST Report Abuse
Swaminathan Chandramouli சீமான் , காங்கிரஸ் அழகிரி வீடுகளிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும் விஜய் அவர்கள் இந்த இரண்டு டுபாக்கூர் ஆசாமிகளிடம் பணம் கொடுத்து பத்திரமாக வைக்க சொன்னதாக கேள்வி
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
08-பிப்-202009:38:55 IST Report Abuse
Sundar நடிகனுக்கு 10 கோடி கொடுத்துவிட்டு 50 கோடி என்று செலவு கணக்கு எழுதுவார்கள். நடிகன் பாவம் எங்கிருந்து 50 கோடிக்கு வரி கட்டுவான்? To convert black money into white and to claim for loss in movie collection business men are also doing . this is also followed in film industry. Reformation in IT direct ta collection will solve this type of issue. But all ruling parties taking advantage using as weapon against those who are against the ruling parties. Vijay and Rajini are not exceptional.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X