பொது செய்தி

இந்தியா

ஏற்றுமதிக்கு இந்திய ஏவுகணை தயார்; நாடுகள் ஆர்வம்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (20)
Advertisement
BrahMos,missile,exports,DRDO,SatheeshReddy,DRDO_chief,PM,Modi,ஏற்றுமதி,பிரம்மோஸ்

புதுடில்லி: அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருப்பதாகவும், அதனை வாங்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டி வருவதாகவும், டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.





இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி நிர்ணயித்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி இலக்கை அடைய, பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்கு வகிக்கும். நமது முக்கிய தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகள், தற்போது ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ளன. இதனை வாங்க, நட்பு நாடுகள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. 300 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணைகளை வாங்க, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ரேடார்கள், டாங்க் எதிர்ப்பு ஏவுகணை, நீர்மூழ்கி குண்டுகள் மற்றும் நிலத்திலிருந்து வானில் தாக்கும் பல்வேறு ஏவுகணைகளும் ஏற்றுமதிக்கு தயாராக உள்ளன.





ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கான தொழில்நுட்பமும், திறனும் நம்மிடம் உள்ளதால், அந்த இலக்கை கண்டிப்பாக நாம் எட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
07-பிப்-202017:27:31 IST Report Abuse
shan நாம் விற்க நினைப்பது நமது நட்பு நாடு மற்றொரு பக்கம் சீனாவுக்கு எதிரி நாடு. மேலும் சீனா பாகிஸ்தானுக்கு எல்லாவகையிலும் உதவுகிறது நமக்கு எதிராகத்தான் அப்படியிருக்க நாம் கட்டாயம் வியட்நாம், தாய்லாந்து, பிலிபைன்ஸ் கு உதவுவதால் அவர்கள் நமக்கும் சீனாவுக்கும் பிரச்சினை வரும்போதும் நாம் பசிபிக் பிராந்தியத்தில் எண்ணெய்கிணறு தூண்டுவதால் அந்த நாடுகளுடன் சேர்ந்து நாம் அந்த நாடுகளை காப்பாற்ற உதவியே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
07-பிப்-202006:00:37 IST Report Abuse
vasumathi ஏழை நாடுகள் அமெரிக்காவிடம் வாங்குவதை விட்டு இந்தியாவிடம் வாங்குவது நல்லது. பதிலுக்கு பணமாக வாங்காமல் பொருளாக பெற்றால் இன்னும் நல்லது. வின் வின் for all
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
07-பிப்-202005:40:23 IST Report Abuse
Sukumaran Sankaran Nair ஐநாவின் ஆயுத களைவு மாநாட்டில் இந்த உற்பத்தியை பற்றி இந்தியா விளக்க வேண்டும் எரிகிற நெருப்பில் மேலும எண்ணெய் ஊற்றுவது போலாகிவிடும், கத்தியைத்தீட்டுவதில் இருக்கும் ஆர்வம் அமைதி காப்பதற்கான புத்திக்கும் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X