அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிஏஏ பாதிப்பு பற்றி ரஜினி சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (110)
Advertisement
DMK,,MKStalin,Rajini,CAA,CAB,NRC,NPR,Rajinikanth,Stalin,திமுக,ரஜினி,ரஜினிகாந்த்,ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தின்(சிஏஏ) பாதிப்பு குறித்து, ரஜினி முதலில் சிந்திக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.,) ஆகியவை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம், இலங்கை தமிழர்களுக்கு தீங்கானது. இதனை எதிர்த்து பல மாநிலங்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. தமிழக அரசும் இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறி வருகிறேன். ஆனால் இதுவரை அதிமுக என்பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.

இச்சட்டங்களுக்கு எதிரான மாணவர்களின் மனநிலையை, கல்லூரிகளுக்கு சென்ற போது நானே நேரில் கண்டேன். சிஏஏ.,வுக்கு எதிரான கையெழுத்து இயக்க பணிகளை நானே நேரில் பார்வையிடுகிறேன். சிஏஏ விவகாரத்தில் மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ஆனால் இந்த சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் என்பதை முதலில் அவர் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இதில் உள்ள கஷ்டங்கள், கொடுமைகளை அவர் தெரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். இதனை அவர் தெரிந்து கொண்டால், அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
08-பிப்-202004:30:24 IST Report Abuse
chenar உங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காக யாரும் போராடவில்லை அவர்களுக்கு பாதிப்பில்லை என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக்கூட தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-பிப்-202013:42:27 IST Report Abuse
Sridhar நிஜமாகவே அறிவுபூர்வ சிந்தனை இருந்தால், இவர் ரஜினியை ஒரு விவாதத்துக்கு அழைக்கவேண்டும். அகதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இவர் சிந்தித்தாரா? இந்த சட்டம் கொண்டுவரவேண்டும் என CPI (M) 2012 இல் ஒரு தீர்மானமே நிறைவேற்றியிருப்பதாவது இவருக்கு தெரியுமா? காந்தியும் நேருவும் கூட பாகிஸ்தானில் இருக்கும் நம் மக்களுக்கு நம் நாட்டில் குடியேற எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என கூறியதாவது தெரியுமா? அட, இந்த சட்டம் ஏற்கனவே கடந்த 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டதாவது தெரியுமா? ஏன் அன்று யாரும் கொந்தளிக்க வில்லை? இந்த விஷயம் ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் ஒரு அம்சம் தானே? அதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை? ஒரு விஷயமும் ஒழுங்காக தெரியாமல், சரியான சிந்தனை திறனும் இல்லாமல், சும்மா மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள், முஸ்லிம்கள் கோபப்படுகிறார்கள் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இல்லை? இந்த லச்சணத்தில், ரஜினியை பார்த்து சிந்திக்க சொல்வது சிரிப்பு மூட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
07-பிப்-202012:38:41 IST Report Abuse
narayanan iyer ஸ்டாலின் ஒரு அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்றும் மிகுந்த ஆற்றல் பெற்றவர் என்றும் நினைத்தேன் . அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாதது வருத்தமளிக்கிறது . இவரிடம் தமிழ்நாட்டை எப்படி நம்பி கொடுப்பது ? தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும் . ஆச்சு இவருக்கும் வயதாகிவிட்டது . தலை முடிக்கு கருப்புச்சாயம் பூசிமட்டுமே இளமையை குறைக்க முடியாது . திமுக ஒரு புதிய தலைவரை தெரிந்தெடுத்து கொள்வது நல்லது . குடியரசு மற்றும் சுதந்திரதினம் நாட்களை படிக்கட்டும் முதலில் . மானம் போகிறது .என்ன செய்வது ? பள்ளிநாட்களில் ஊர்ச்சுற்றியாச்சு .இனிப்படித்தாலும் மனதில் நிற்காது .இளைமையில் கல் என்று இதனால்தான் மூத்தவர்கள் சொன்னார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X