சென்னை : 'இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர்; இப்போது உண்மை, உண்மையா வெளிவருதே' என பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விஜய் வீட்டில் நடந்து வரும் ஐடி ரெய்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சம்பளமாக ரூ.30 கோடி பெறுவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? என பதிவிட்டுள்ளார். தனது மற்றொரு டுவிட்டில், 'ஒருவருடைய உண்மையான பெயரைச் சொன்னதுக்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவரெல்லாம் இப்ப என்ன ஆவார்களோ? உண்மை, உண்மையா வெளிவருதே' என பதிவிட்டு விஜயை சீண்டி உள்ளார்.