பொது செய்தி

இந்தியா

பாக்., மாணவர்களை மீட்க தயார்: இந்தியா

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (51)
Advertisement

புதுடில்லி: பாக். கோரிக்கை விடுத்தால் சீனாவில் சிக்கியுள்ள பாக் மாணவர்களை மீட்க தயார் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.






ரவீஷ்குமார் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து இதுவரை 640 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் இந்தியா வர விரும்பினாலும், அவர்களுக்கு நடந்த சோதனையில் நோய் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததை தொடர்ந்து இந்தியாவுக்கு அவர்கள் கொண்டு வரப்படவில்லை.என்று தெரிவித்தார்.





இந்நிலையில், சீனாவில் தங்கியுள்ள பாக்., மாணவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரவீஷ்குமார், 'மாணவர்களை மீட்கும் படி பாக்கிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை. மாணவர்களை மீட்க பாக்., கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
07-பிப்-202013:12:19 IST Report Abuse
anbu தெண்டம் மாதிரி அரசுக்கெதிரா சம்பந்தமே இல்லாமல் கருத்து போடும் கும்பலை அனுப்பி விடுங்க. அவர்கள் அப்பிடியே மீட்டுக்கொண்டு பாகிஸ்தானில் சுகமாக வாழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
07-பிப்-202013:06:58 IST Report Abuse
anbu வேண்டாம் , வேண்டாம் .இது விஷ பரீட்ச்சை. சும்மா கிடக்குற கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகை சொறிந்த மாதிரி முடியும். எந்த மூர்க்கனும் நன்றி சொல்ல போவதில்லை. நன்றியுணர்வு மூர்க்கத்தில் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
07-பிப்-202012:34:08 IST Report Abuse
mohan மாணவர்கள் பாக் அரசிடம் பேசி, பாக், இந்தியாவுடன் கலந்து ஆலோசித்து மாணவர்களை மீட்டு பாகிஸ்தானில் விட்டு விடலாம்.. தீவிரவாதம் மாணவர்கள் கையில் இல்லை.. அது உலக திருடர்களிடம் இருக்கிறது..அதற்கு ஒரு சிலர் பலி ஆகி விடுகின்றனர்.அதனால் தான் உலகத்தில் பிரச்சனை..அந்த அந்த நாட்டில் உள்ள திருடர்களை எல்லா நாடுகளும் ஒதுக்கி வைத்தால், தீவிர வாதம் இருக்காது.. மக்கள் நிம்மதியாக வாழலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X