முகத்தை மாற்றிய கொரோனா வைரஸ் மாஸ்க்: நர்ஸ்களின் தியாகம்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (13)
Advertisement
CoronaVirus, Nurses, Mask, Treating, Patients, Face, Mark, China, கொரோனா, வைரஸ், மாஸ்க், சீனா, நர்ஸ்கள், முகம், வடு, அடையாளம், நோயாளிகள், மருத்துவர்கள்

பீஜிங்: கொரோனா வைரஸ் பாதித்ததவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நர்ஸ்கள் மாஸ்க் அணிந்துக்கொண்டே இருப்பதால் அவர்களின் முகத்தில் மாஸ்க் அழுத்திய அடையாளம், வடுவாக பதிந்துள்ளது.




சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சுமார் 28,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வுஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. வுஹான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.




இந்நிலையில், வைரஸ் பாதித்த நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வைரஸ் தங்களையும் பாதிக்காமல் இருக்க அனைவரும் எந்நேரமும் மாஸ்க் அணிந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஒருநாளைக்கு 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே இவர்கள் தூங்குகின்றனர். அதுவும், தரையில் நோயாளி போல் முடக்கிப்படுத்து தூங்குகின்றனர். இது மட்டுமல்லாமல், அவர்கள் எப்போதும் மாஸ்க் அணிந்து பணி செய்வதால், அவர்களின் மாஸ்கின் அடையாளம் வடுவாக படிந்து காணப்படுவது பார்ப்போருக்கு வேதனையை வரவழைக்கிறது.


இது தொடர்பான புகைப்படங்களை சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது. நர்ஸ்கள் தங்களின் மாஸ்க்கை அகற்றி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலாக பரவியுள்ளது. நர்ஸ்களின் தன்னலமற்ற சேவைக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
08-பிப்-202010:47:11 IST Report Abuse
பெரிய ராசு என்பெருமான் உங்களை காப்பாற்றுவராக
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
07-பிப்-202012:44:29 IST Report Abuse
Ravichandran சகோதரிகளே பாவமாக இருக்கிறது, உதவி செய்ய முடியவில்லையே என வருந்துகிறோம். உங்க ஊருலே மனுஷனுக்கு முதல எத சாப்பிடலாம் எத சாப்பிடக்கூடாதுனு கத்துக்கொடுங்க, எல்லா ஐட்டத்தையும் சாப்பிட்டா இப்படித்தான்.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
07-பிப்-202010:16:27 IST Report Abuse
Rangiem N Annamalai பாவம் .வருத்தமாக உள்ளது .சகோதரிகளே விரைவில் நலம் பெறவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X