பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.என்.எல்., மூடப்படாது: மத்திய அரசு உறுதி

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (10)
Advertisement
BSNL,MTNL,RaviShankarPrasad,Govt,RajyaSabha,பிஎஸ்என்எல்,எம்டிஎன்எல்,ரவிசங்கர்பிரசாத்,பார்லிமென்ட்,ராஜ்யசபா,மாநிலங்களவை

புதுடில்லி: பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் மூடப்படாது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பார்லி.,யில் தெரிவித்தார்.


வலுப்படுத்த முயற்சி


இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், 'பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட்' மற்றும் எம்.டி.என்.எல்., எனப்படும், 'மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடட்', ஆகிய நிறுவனங்களை மூடமாட்டோம். அவற்றை வலுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்நிறுவனங்களின் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், சரியான முறையில் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.






நாட்டின் பாதுகாப்பு முக்கியம்:


இணையதள பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'இணையதளம் மூலம், மக்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவது, அடிப்படை உரிமைதான். எனினும், அந்த உரிமையை தவறாக பயன்படுத்தக்கூடாது. நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வன்முறைகள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட, இணையதளம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை யாராலும் மறுக்க முடியாது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான், அந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பும், இணையத்தின் மூலம் தன் காரியத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-பிப்-202009:55:37 IST Report Abuse
Lion Drsekar தகுதியும் திறமையும் உள்ளவர்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து உதவி முன்வாருங்கள் ,குளிர் சாதனை அறைகளில் அமர்ந்து கொண்டு ,வெளியே சுய தொழில் செய்து கொண்டு இங்கு சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு பணியாற்றும் ஊழியர்களைக் கண்டு அவர்களையும் களைந்து எடுங்கள், பொது மக்களுக்கு தெரியும் எந்த எந்த ஊழியர்கள் எந்த எந்த தொழில் பார்க்கிறார்கள் என்று அப்படி இருக்க துறைக்கு எல்லாமே தெரியும், சம்பளம் வாங்குபவர்கள் அந்த தொழில் நிறுவனங்களில் மற்றும் பணியாற்றவேண்டும் நிலைக்கு வந்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Silambu Arasan - dharmapurl,இந்தியா
07-பிப்-202009:36:59 IST Report Abuse
Silambu Arasan அப்போ கண்டிப்பா இழுத்து போறாங்க மூடப்படாது மூடப்படாது சொல்லித்தான் எல்லாம் தனியாருக்கு குடுத்துட்டு இருக்கீங்க ...
Rate this:
Share this comment
Cancel
07-பிப்-202009:31:19 IST Report Abuse
தமிழ் @தமிழ் மைந்தன், ஏன் நீதான் அதுக்கு md போஸ்ட் ஏத்துக்கோ. உன் திறமையால லாபத்துக்கு கொண்டுவா பாப்போம். உனக்கு தூங்கற நேரத்தில்கூட அவங்க நெனப்புத்தான் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X