சிறுபான்மையினர் மீது தாக்குதல்; பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டனம்

Updated : பிப் 06, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (9)
Advertisement
America,Pakistan,Hindus,MikePompeo,India,அமெரிக்கா,பாகிஸ்தான்,இந்து,ஹிந்து,தாக்குதல்

வாஷிங்டன்: பாகிஸ்தானில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில், 27 நாடுகள் அங்கம் வகிக்கும், சர்வதேச மத சுதந்திர கூட்டணி என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.





இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான், இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், சமீபகாலமாக, ஈராக், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் சொத்துக்கள், வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

இதேபோல், நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் மீதும், மியான்மரில் முஸ்லிம்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சீனாவிலும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அனைத்து மதத்தினருக்கும், தங்கள் கலாசாரப்படி வாழ்வதற்கான சுதந்திரமான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, இந்தியாவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்குப் பின் நடக்கும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் கவலை தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-பிப்-202013:42:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதெல்லாம் இங்குள்ள சிறுபான்மையினருக்கு தெரியாது. இவர்களில் சில குழுவினர் அரசாங்கத்தையே மிரட்டி வருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
07-பிப்-202012:30:26 IST Report Abuse
Ravichandran பெரும்பான்மை ஹிந்து இன்னும் இளித்தவாயனாக நடுநிலை நாடகம் போட்டு கொண்டு இருந்தால் இந்தியா இந்த நிலையை வேகமாக எட்டும். இனி என்மதம் பற்றி எவன் பேசினாலும் அவன் மானத்தை வாங்காமல் விடமாட்டேன் இது எங்கள் குலசாமி மீது சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
07-பிப்-202012:01:17 IST Report Abuse
செந்தில் இந்தியாவில் சிறுபான்மையினால் பெரும்பான்மையினர் நேரடியாக தாக்கப்படுவதை இவர்கள் பேசமாட்டார்கள். அவர்கள் பெரும்பான்மையினரை அழித்துவருவதை கேட்கமாட்டார்கள். இனி நமக்கு நாமே தான் உதவிக் கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X