‛கொரோனா' வை கண்டறிந்த டாக்டர்,அதே வைரஸ் தாக்கி பலி

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 06, 2020 | கருத்துகள் (10)
Advertisement
‛கொரோனா' ,கண்டறிந்த டாக்டர்,அதே வைரஸ்# , பலி

பீஜிங்: கொரோனா வைரஸை முதன்முறையாக கண்டறிந்த டாக்டர் லீ வென்லியாங்,34 அதே வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சீனாவை சேர்ந்த டாக்டர் லீ வென்லியாங்,34 இவர் சீனாவில் வூஹான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் வேலை செய்து வந்த போது இவரிடம் வந்த நோயாளிகள் தீராத காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என தெரியவந்தது.

இவர்களில் எட்டு பேருக்கு ஒரே மாதிரியான ‛வைரஸ் தாக்கம் இருப்பதையும் அது ‛கொரோனா என்ற கொடிய வைரஸ் என்பதை கடந்த டிச., மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டார். இது குறித்த தகவல்களை சக டாக்டர்களுக்கு, கடந்தாண்டு, டிச., 30ம் தேதி அனுப்பினார். நோயாளிகளை கையாளும் போது பாதுகாப்புக்காக 'மாஸ்க்' அணிந்து கொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறித்தினார்.


எச்சரித்தார்


இந்த தகவல்கள் இணையதளத்தில் வேகமாக பரவியதால், சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் லீ வென் லியாங்கை கண்டித்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு, ஜன. 10ல், கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு, வென்லியாங் சிகிச்சை அளித்துள்ளார். அதில், அவரையும், வைரஸ் தாக்கியது.

தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - Madurai,இந்தியா
07-பிப்-202008:51:26 IST Report Abuse
raman சீனா இந்த வைரஸ் பாதித்த 27000 மக்களை கொல்வதற்காக கோர்ட் உத்தரவிற்காக இன்று காத்திருக்கிறது. இன்று தீர்ப்பு. அநேகமாக தீர்ப்பு எப்படி இருந்தாலும் கொன்று விடுவார்கள். இது வரை வெளி உலகுக்கு அறிவித்த இறப்பு எண்ணிக்கை ,வழக்கம் போல் குறைத்துக் காண்பிக்கப்பட்டது. பாவம் மக்கள்.. காஷ்மீர் பற்றி செய்திகள் வரவில்லை என்று குதித்த தோழர்களும் இம்ரான் அபிமானிகள் இப்பொழுது மவுனம் காப்பதேன்
Rate this:
Share this comment
binny - ,
07-பிப்-202011:43:25 IST Report Abuse
binnyஅதுக்கு வாய்ப்பே இல்ல. இருவதாயிரம் பேர கொன்னுட்ட அந்த வைரஸ் உலகத்துல யாருக்கும் இல்லன்னு ஆயிருமா? திரும்பவும் பரவத்தான் செய்யும். சீனா ஆயிரக்கணக்கான மக்களை கொன்றால், வெளிநாட்டினர் அங்கே செல்ல மாட்டார்கள். மற்ற நாடுகளும் சீனாவுடன் வர்த்தகம் செய்ய முன்வராது. ஏற்கனவே பல்லாயிறக்கணக்கில் அவர்கள் பன்றிகளை கொல்லும் வீடியோ உலகம் முழுதும் பரவி விட்டது, மக்களுக்கு சீனா என்றாலே பிடிக்காத நாடாகிவிட்டது. இந்நிலையில் மக்களை கொல்லும் விடியோக்கள் வெளிவந்தால் அத்துடன் முடிந்தது சீனாவின் கதை....
Rate this:
Share this comment
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
07-பிப்-202007:44:56 IST Report Abuse
Mahesh டாக்டர்கள் பணி மகத்தானது... எல்லாவிதமான நோயாளிகளையும் கையாள வேண்டும்... எல்லோரையும் எச்சரித்த இவர் அந்நோயால் இறந்தது மிகவும் வருத்தமான செய்தி...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
07-பிப்-202005:57:57 IST Report Abuse
Sanny என்னதான் இருந்தாலும், சீனாவை நம்ப முடியாது. வளர்த்தவனையே அம்பு எய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X